search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்
  X

  8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
  • போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர்.

  ஓமலூர்:

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின் ஐ.டி.யில் இருந்து குறும் தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து மூர்த்தி அந்த பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார்.

  பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்பு கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

  இந்த நிலையில் மூர்த்தி தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

  3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5-ந்தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

  அதன்பேரில், போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில், ரஷீதா பற்றி திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

  பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மயக்கி உள்ளார். சொகுசு கார், மோட்டார்சைக்கிளில் பியூட்டியாக போஸ் கொடுத்து அவரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும், அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார்.

  ரஷீதாவுடன் பழகியதும் மூர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மேலும் பணத்தை அவருக்கு வாரி வழங்கி உள்ளார். பணத்தை சுருட்டிக் கொண்டு ரஷீதா ஓட்டம் பிடித்து விட்டார்.

  இதற்கிடையே கடந்த மாதம் 20-ந்தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், எது கணவர் சத்ய கணேஷ், ரஷீதாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்கிறார் என கூறியுள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்தது.

  பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றி திருமணம் செய்து, நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த ரஷீதா, இதுவரை 8 திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமான ரஷீதாவின் போன் சுவிட்ச்-ஆப் ஆகியுள்ளது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் ? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்யாண மன்னன்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக கல்யாண ராணிகளின் அட்ட காசம் அதிகரித்து வருகிறது. 8 கல்யா ணம் செய்துநகை, பணத்துடன் இன்ஸ்டா கிராம் அழகி தலைமறைவாகி உள்ளார்.

  இதுகுறித்து தொளசம்பட்டி போலீசாரிடம் கேட்டபோது, புகார் கொடுத்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது அது போன்று எந்த ஒரு பெண்ணும் வந்து இங்கு தங்கவில்லை என கூறியுள்ளனர். முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம். புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்.ஐ. ஆர். பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.

  ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளி ப்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் உள்பட 6 ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து பணம், நகை என அனைத்தையும் திருடிஏமாற்றினார் குறிப்பிடத்தக்கது.

  அப்பாவி பெண்களை ஏமாற்றி ஆண்கள் திருமணம் செய்து மோசடி செய்த காலம் போய் ரஷிதா போன்ற கல்யாண ராணிகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மோசடியில் இறங்கியிருப்பது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்க தொடங்கி உள்ளது. கல்யாணம் செய்பெது கொடுக்கும்வரை பெண்ணை பெற்ற பெற்றோர் மட்டுமல்ல ஆண்பி ள்ளைகளை பெற்றவர்களும் அலாட் ஆக இருக்கணும்போல....

  Next Story
  ×