search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lock breaking"

    • எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு, நைனாபட்டி ரோட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (37). இவர் எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் வெள்ளாண்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    பூட்டு உடைப்பு

    நேற்று முன்தினம் வழக்கம்போல் கவிதா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பழங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

    அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விழித்துக் கொண்டதால் கொள்ளையடித்த பொருள்களின் ஒரு பகுதியை கடை அருகிலேயே போட்டு விட்டு சம்பந்தப்பட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கண்காணிப்பு கேமரா

    இதுகுறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நள்ளிரவு நேரத்தில் கவிதாவின் கடைக்குள் நுழையும் மர்ம நபர் 3 முறை பெரிய அளவிலான பைகளில், அங்கிருந்த பழம் மற்றும் பொருட்களை அள்ளிச் செல்வது பதிவாகி உள்ளது.

    இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பழக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து, எடப்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர் கொள்ளை

    மேலும் அண்மையில் கவிதாவின் பழக்கடை அருகே உள்ள சேகர் (48) என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    சேலம் - எடப்பாடி பிரதான சாலையில் தொடர்ந்து பழக்கடைகளை குறிவைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    இரும்பாலை ஊழியர்கள் குடியிருப்பில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழியர் குடியிருப்பு

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மோகன் நகரில், இரும்பலைக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு இரும்பாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், இன்று காலை இந்த குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அருகில் வசிப்பவர்கள், இது குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட தில், இந்த வீடுகளில் வசித்து வந்த ஊழியர்கள் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென் றுள்ளது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து, போலீசார் கொள்ளை நடந்த வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னரே வீட்டிலிருந்து எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    அடுத்தடுத்து 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இரும்பாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொன்மலையில் டாஸ்மாக் பூட்டு உடைக்கப்பட்டது
    • லாக்கரை திறக்க முடியாததால் ரூ.2¾ லட்சம் தப்பியது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவர் திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதன் விற்பனையாளர்கள் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டனர்.பின்னர் சூப்பர்வைசர் செல்வராஜ் விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்தி 77 ஆயிரத்து 80 பணத்தை எண்ணி கடை லாக்கரில் வைத்து பூட்டினார்.

    அதன் பின்னர் கடை ஷட்டரை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். மறுநாள் காலை 7 மணி அளவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு டாஸ்மாக் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பொன்மலை போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைத்திருந்த பணம் அப்படியே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டனர்.

    டாஸ்மாக் ஷட்டர் பூட்டை உடைத்த கொள்ளையர்களால் லாக்கர் பூட்டை உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


    • பொம்மண்ண செட்டிக்காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 23). இவர் அதேபகுதியில் டெக்ஸ்டைல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பொம்மண்ண செட்டிக்காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 23). இவர் அதேபகுதியில் டெக்ஸ்டைல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.10,000 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து துளசிராமன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் சேலம் குகை புலிக்குத்தி 4-வது தெருவில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையை சமியுல்லா மனைவி ஜமீனா (வயது 37) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்ற இவர், இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.13,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    வெறுங்கையுடன்

    இதேபோல், இந்த கடைக்கு அருகில் இருந்த சக்திவேல் (31) என்பவருக்கு சொந்தமான பிரவுசிங் சென்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு எதுவும் சிக்காததால், கொள்ளையர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.

    வழக்கு பதிவு

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் செவ்வாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார்.
    • 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் திருச்சிற்றம்பலம் அருகே நாவல்குளம் மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 39) என்பவர் கால்நடைகளுக்கான மாட்டு தீவன கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடுத்து உதயா சிமெண்ட் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் காலையில் சென்று பார்த்தபோது தீவன கடை மற்றும் சிமெண்ட் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீவன கடை உரிமையாளர் விஜயகுமார் கடை உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 16,000 மதிப்பிலான 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விஜயகுமார் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கடைகளில் கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

    • இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார்.
    • இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா (50) கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார். வேலை முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 33/4 பவுன் தங்க நகைகள், 1/4 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தார்.
    • அதிகாரிகள் சாவி தொலைந்து விட்டதாக பதில் அளித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அண்ணா சிலை, காந்தி சிலை உள்ளது. இந்த 2 சிலைகளுக்கும் கூண்டு அமைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்திருந்தார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அண்ணா சிலைக்கு கூண்டு போடப்ப ட்டிருந்த பூட்டின் சாவி அ.தி.மு.க.வினர் கேட்டனர். ஆனால் அதிகாரிகள் சாவி தொலைந்து விட்டதாக பதில் அளித்ததால் அண்ணா சிலைக்கு போட்டிருந்த பூட்டு உடைத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அதிகாரிகளின் அலட்சி யத்தால் அண்ணா சிலையின் கூண்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • பிரேத பரிசோதனைக்காக இந்த ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளது.
    • இதுகுறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இங்கு தான் கொண்டு வருவது வழக்கம். பிரேத பரிசோ தனைக்காக இந்த ஆஸ்பத்திரியில் குளிரூ ட்டப்பட்ட பிணவறை உள்ளது.

    இன்று காலை இந்த பிணவறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து இதுகுறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு பிணவறையின் பூட்டை உடைத்தது யார் என்றும் இதற்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே உரக்கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்ரோட்டில் பிரபல உரக்கடை ஒன்று உள்ளது. இந்த உரக்கடையை தொழுவந்தாங்கால் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வியாபாரி சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

    வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து விட்டு உரக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மீண்டும் கடைக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த கல்லாப்பெட்டி உடைத்து அதில் இருந்த 30,000 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பன்னீர்செல்வம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மேலும் பகண்டை கூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து உரக்கடையில் கைவரிசை காட்டிய மறுமணம் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இதே போன்று பகண்டை கூட்ரோடு சாலை மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சூப்பர் மார்க்கெட் மருந்து கடை மொபைல் கடை, டீக்கடை போன்ற பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்த கொள்ளை கும்பலை தடுக்கும் விதமாக போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றன.

     

    ×