வானூர் அருகே கடைகளின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை

விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
வானூர் அருகே கடைகளின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் திருச்சிற்றம்பலம் அருகே நாவல்குளம் மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 39) என்பவர் கால்நடைகளுக்கான மாட்டு தீவன கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடுத்து உதயா சிமெண்ட் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு விஜயகுமார் விற்பனை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் காலையில் சென்று பார்த்தபோது தீவன கடை மற்றும் சிமெண்ட் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீவன கடை உரிமையாளர் விஜயகுமார் கடை உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 16,000 மதிப்பிலான 15 மாட்டுத்தீவன மூட்டைகள் மற்றும் சிமெண்ட் கடையில் இருந்து 6500 ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விஜயகுமார் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கடைகளில் கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com