திண்டிவனத்தில் பரபரப்பு: அரசு ஆஸ்பத்திரி பிணவறை பூட்டு உடைப்பு

பிரேத பரிசோதனைக்காக இந்த ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளது. இதுகுறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
திண்டிவனத்தில்  பரபரப்பு: அரசு ஆஸ்பத்திரி பிணவறை பூட்டு உடைப்பு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இங்கு தான் கொண்டு வருவது வழக்கம். பிரேத பரிசோ தனைக்காக இந்த ஆஸ்பத்திரியில் குளிரூ ட்டப்பட்ட பிணவறை உள்ளது.

இன்று காலை இந்த பிணவறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து இதுகுறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு பிணவறையின் பூட்டை உடைத்தது யார் என்றும் இதற்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com