என் மலர்
சேலம்
- பெரமனூர் சாலையில் மரம் திடீரென சாய்ந்து விழுந்தது.
- தொடர் மழை, பனியால் ஏற்காட்டில் காபி விவசாயம் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நேற்றிரவு ஆனை மடுவு, தலைவாசல், காடை யாம்பட்டி, கரியகோவில், தம்மம்பட்டி, பெத்தநா யக்கன் பாளையம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை காலத்தில் பெய்தமழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகராட்சியில் நேற்றிரவு சாரல் மழை பெய்த போது 15-வது கோட்டம் பெரமனூர் சாலையில் ஒரு மரம் திடீரென சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.
பின்னர் மாநகராட்சி ஊழியர்களை, தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.
மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் குளிர் வாட்டி வதைக்கிறது. இடையில் பனி மூட்டமும் காணப்படுகிறது. குளிர் அதிகமாக இருப்பதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்துவிட்டது. குளிர் மற்றும் காற்று அதிகமாக வீசுவதால் உள்ளூர் வாசிகள் பெரிதும் சிரமப்டுகின்றனர். ஸ்வெட்டர், குல்லா போன்ற உடைகள் அணிந்து தான் வெளியே வேண்டி உள்ளது.
பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். தொடர் மழை, பனியால் ஏற்காட்டில் காபி விவசாயம் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் முழுவதும் இன்று தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழை தூறலாக நீடித்ததால் சேலத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை வருகிறது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 16 மி.மீ. பதிவாகி உள்ளது . தலைவாசல்-11, காடை யாம்பட்டி-10, கரிய கோவில்-10, தம்மம் பட்டி-9, பெத்தநாயக்கன்பாளை யம் 8, மேட்டூர் 7.6, கெங்கவல்லி 6, வீரகனூர் 6, ஏற்காடு 5.6, சேலம் 4.2, எடப்பாடி 4, ஆத்தூர் 2 மி.மீ. என மவட்டம் முழுவ தும் 98.40 மி.மீ. மழை பெய்துள்ளது.
- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சேலம் மாவட்ட வக்கீல்கள் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்:
நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சேலம் மாவட்ட வக்கீல்கள் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர்கள் வக்கீல்கள் சசிகுமார், இளைய ராஜா, சந்தியூர் பார்த்திபன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் பிரதாபன், பொன்.ரமணி, மாசிலாமணி, திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி னார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கனகராஜ், வீரமணி, செல்வராஜ், ரவி, சின்னதுரை, சதீஸ்குமார், திருமுருகன், நேதாஜி, செந்தில்குமார், கதிரவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி - ஜலகண்டாபுரம்ரோடு அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மாதையன்.
- அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி - ஜலகண்டாபுரம்ரோடு அருகே உள்ள பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மாதையன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலை யில், இவரது மனைவி சுந்தராம்பாள், பெருமாள் கோவில் காலனி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது மகன் திருவண்ணா மலை பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் 5-ம் தேதி சுந்தராம்பாள் தனது மகனை பார்க்க திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார்.
நகை கொள்ளை
இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் பெருமாள் கோவில் காலனியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த விலை உயர்ந்த எல்.இ.டி டிவி மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து சுந்தராம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப் பாடி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அருகில் உள்ள கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கள்ளக்காதல் ஜோடி
இதில் கொள்ளை சம்ப வம் நடந்த அன்று அந்த வீட்டிற்குள் நுழைந்தது சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமம், பாப்பம்பாடியை அடுத்த சோழவந்தான் வளவு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) மற்றும் ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மனைவி சியாமளாதேவி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சக்திவேலுக்கும், சியாமளா தேவிக்கும் தகாதஉறவு இருந்து
வந்ததாகவும், உல்லாச வாழ்க்கையை அனுபவிப்ப தற்காக, இந்த கள்ளக்காதல் ஜோடி சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டுச சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
ஜெயிலில் அடைப்பு
இதையடுத்து இருவரையும் கைது செய்த எடப்பாடி போலீசார் அவர்களிடமிருந்து. கொள்ளையடிக்கப்பட்ட எல்.இ.டி டிவி மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மீட்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மகளிர் உரிமை தொகை பெற சேலத்தில் சிறப்பு முகாம்களில் பயோ மெட்ரிக் மூலம் பெயர் பதிவு நடந்தது.
- ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.
சேலம்:
சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்ப டும் என வாக்குறுதி அமைக் கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்
தொடங்கப்படும்என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்திருந்தார்.
விண்ணப்பம்
இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப் பம் மற்றும் டோக்கன் விநியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் விண் ணப்ப பதிவு முகாம் தொடங்கி யது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார்.
ஆயிரம் முகாம்
இதை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் உள்ள 11 லட்சம் கார்டுகளில் 500 கார்டுகளுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் 1000-க்கும் மேற்பட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் இன்று தொடங்கியது. இதையொட்டி, டோக்கனில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தின் படி பொதுமக்கள் முகாம்களில் குவிந்தனர்.
அவர்களிடம் முதலில் ஆதார் எண் பதியப்பட்டது. பின்னர் விரல் ரேகை பயோ மெட்ரிக் கருவி மூலம் சரி பார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு சரியாக அமை யாத வர்களுக்கு ஆதார் அட்டை யுடன் இணைக்கப் பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறப்பட்டு பதிவு ெசய்யப்பட்டது. பின்னர் விண்ணப்பங்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டது.
இந்த பணியில் வட்ட வழங்கல் துறை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட் டுள்ளனர். இந்த முகாம் நடைபெறும் சில இடங்க ளில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தகுதி உள்ள அனை வருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
- ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் (40). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.
தகராறு
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஓசியில் மது கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அரிதாஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.
வழக்கு
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா (வயது 36). இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார். இதை பார்த்த போலீசார், உடனடியாக ஓடி வந்து, அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தான், கந்தம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். 20 மாத தவணையில் கட்டுவதாக வாங்கியிருந்தேன்.
இதையடுத்து 10-வது தவணையில் முழு பணத்தையும் அவரிடம் கொடுத்தபோது பணத்தை வாங்க மறுத்து 20 தவணையும் முடிந்த பிறகு தான் வீட்டின் பத்திரத்தை தருவேன் என கூறினார். பணத்தை வாங்கி கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என கேட்டபிறகும் அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சாணி பவுடரை குடித்து விட்டேன். பத்திரத்தை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ெதரிவித்தார்.
இதையடுத்து போலீசார், அலமேலு மங்கையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சேலம் பெரமனூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
- கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
ேலம்:
சேலம் 4 ரோடு அருகே உள்ள பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் வசிப்பவர் சின்னவர் (28).
இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சின்னவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்தார்.
இருவரும் பெரமனூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி சின்னவர், மகாலட்சுமியிடம் ஏன் வீட்டை சுத்தப்படுத்தி வைக்கவில்லை என கேட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே திருமணமாகி 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சேலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
இதில் மகாலட்சுமியின் பள்ளி சான்றிதழ் ஆய்வு செய்தபோது 17 வயதில் மகாலட்சுமியை சின்னவர் திருமணம் செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ. சேலம் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக சின்னவரை போக்சா வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
- இந்த பூங்காவில் பொது பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5. வசூல் செய்யப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொது பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5. வசூல் செய்யப்படுகிறது.பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு தருமபுரி நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர்.
- சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
- கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. எட்டு பட்டியை கட்டு ஆளும் அன்னை முதன்மை பெற்ற கோட்டையில் எழுந்தருளி பெரிய மாரியம்மன் என்னும் திருநாமத்தில் பொது மக்களுக்கு அருளாட்சி புரிகிறார்.
21 நாட்கள்
தற்போது திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால் வழக்கமான திருவிழாவில் சில மாற்றங்கள் செய்ய ப்பட்டு நாளை 25-ந் தேதி முதல் (ஆடி மாதம் 9-ந் தேதி) அடுத்த மாதம் 15-ந் தேதி வைரை 21 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த 17-ந் தேதி மூகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூைஜகள் நடக்கிறது.
பூச்சாட்டுதல் விழா
விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கொடுக்கும் பூக்களை அம்மனுக்கு சாத்தி சிறப்பு பூைஜகள் நடைபெறும். கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பு நிழ்ச்சியும், 9,10 மற்றும் 11-ந் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதானை நடக்கிறது.
கூடுதல் பாதுகாப்பு
இந்த நாட்களில் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன.
- சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.
சேலம்:
சேலத்தில் நேற்று காலை முதலே வானத்தில் கரு மேகங்ககள் திரண்டன. பின்னர் சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்ப்டடி, ஜங்சன், கொண்டலாம்ப்டடி என அனைத்து பகுதிகளிலும் 4 மணிக்கு பெய்த தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது.
மேலும் இரவிலும் கன மழையாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.கிச்சிப்பாளையம் மெயின்ரோட்டில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் அதிக அளவில் ஓடியதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல சேலம் நாராயண நகர், கருவாட்டு பாலம், சித்தேஸ்வரா கருங்கல்பட்டி, களரம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்கள் உள்பட பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகள் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.
சேலம் புறநகர்
இதே போல சேலம் புறநகர் மாவட்டத்தில் ஏற்காடு, பெத்தநாயக்கன் பாளையம்,, சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் சற்று நிம்மதியாக தூங்கினர்.
இதற்கிடையே சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, பெரமனூர், கிச்சிப்பாளையம், தாதா காப்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல இடங்களில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கொசுக்கடியால் தவித்தனர்.
56.06 மி.மீ. பதிவு
மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏற்காடு 6.4, பெத்தநாயக்கன் பாளையம் 5, சங்ககிரி 4.4, தம்மம்பட்டி 4, ஆனைமடுவு 4, கெங்கவல்லி 3, ஓமலூர் 2.1, கரியகோவில் 2, ஆத்தூர் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 56.06 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- பெயிண்ட் குடோனில் தீப்பிடித்து பயங்கரமாக எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள காமனேரி பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஓமலூர் பைபாஸ் அண்ணமார் தனியார் விடுதியின் எதிரே உள்ள ஒரு குடோனில் பெயிண்ட், தின்னர் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
வழக்கம் போல் நேற்று குடோனை மூடிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் பெயிண்ட் குடோனில் தீப்பிடித்து பயங்கரமாக எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குடோனில் தக தகவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க வேண்டி குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீ அதிகமாக கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை. பின்னர் சேலத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தின்னர் என்பதால் தீ அணையாமல் எரிந்து கொண்டு உள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடோனில் இருந்த பெயிண்ட், தின்னரின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் இந்த பெயிண்ட் குடோனில் தீ வைத்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கோமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
- பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.
வாழப்பாடி:
வறண்ட நிலங்களிலும் வறட்சியை தாங்கி வளர்ந்து, நீண்ட கால பலன் தரும் மரங்களுள் 'பனை' முதன்மையானதாகும். இதன் குழல் போன்ற சல்லி வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் தகவமைப்பு கொண்டதால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
நமது மாநில மரமாக போற்றப்படும் பனை மரத்தின் ஓலைகள் குடிசை கூரை வேய்தல், விசிறி, கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது. பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீரை பதப்படுத்தி சித்த மருந்துகளில் சேர்க்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற் கண்டு தயாரிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனை மரத்துப்பட்டி, பெத்த நாயக்கன்பாளையம், வீரபாண்டி, ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், பேளூர் பகுதிகளில் மானாவரி, தரிசு நிலங்கள் மற்றும் ஆறு, குளம், குட்டை, நீரோடை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்பட்டன. சேலம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் பனைமரங்கள் நிறைந்திருந்த பெரும்பாலான பனந்தோப்புகள் அழிந்து விட்டன.
நீர்நிலைகளின் கரையோரங்களிலும், தரிசு நிலங்களிலும், விளை நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும், செங்கல் சூளைகளுக்கும், வீட்டு உபயோக பயன்பாட்டிற்காகவும் வெட்டப்பட்டன. வறட்சியை தாங்கி வளர்ந்து நீண்டகாலத்திற்கு பலன் தரும் பனை மரங்களை வளர்க்க தற்கால சந்ததியிடையே ஆர்வம் இல்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம் கிராமத்தில் விலாரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணி மற்றும் இவரது கணவர் மணி ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, உதிர்ந்து விழுந்து கிடந்த ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை சேகரித்தனர்.
இந்த விதைகளை கிராமத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களிலும் விதைத்து வருகின்றனர்.அசுர வேகத்தில் குறைந்து வரும் நீண்டகால பலன்தரும் பனை மரங்களை வளர்க்கவும், மற்ற கிராம மக்கள்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும், பனை விதைகளை சேகரித்து விதைத்து முன்னுதாரணமான விலாரிபாளையம் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






