என் மலர்tooltip icon

    சேலம்

    • ரங்கநாயகி (60). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி சிவனார் தெரு பகுதியில் நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த 2 பேர் அவர் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாயகி (60). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி சிவனார் தெரு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவர் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய குட்டி புலி என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அந்த சிறுவன் போலீசாரிடம் சிக்கினான். அவனை அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சிறுவன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.
    • இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனிடையே சேலம் மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள அக்ரஹாரம் தெருவில் நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள் அரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    நேற்று பெய்த மழையால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதினர் கூறும் போது சம்பந்தப்பட்ட அக்ரஹார தெருக்களில் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது.

    இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கப்படவில்லை. எனவே சாலையை சரிசெய்து தரவேண்டும் என்றனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் நிஷாந்த், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தண்டவாள பகுதியில் மாணவர்கள் விளையாட வேண்டாம். உரிய பாதையை பயன்படுத்த வேண்டும். தண்டவாள பகுதியை தாண்டி செல்ல வேண்டாம். சிக்னலை மதித்து நடக்க வேண்டும். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க கூடாது. தண்டவாளப் பகுதியில் கற்கள் வைத்து விளையாடுவதும், ஓடும் ரயில் மீது கற்களை எரிந்து விளையாடுவதும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம் என எடுத்துக் கூறி மாணவர்களுடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
    • சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.

    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    ஆத்தூர்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இன்று அதிகாலை முதலே ஆத்தூர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, கொத்தாம்பாடி, செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லேசான பனி பொழிவு ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் மஞ்சள் நிற முகப்பு விளக்கு எரிய விட்டபடி சென்றனர். இன்னிலையில் அதிகாலை முதலே பனி பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
    • அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக நள்ளிரவு வந்த மற்றொரு லாரி நின்ற லாரியின் வலது புறம் உரசி சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதி நின்றது.

    இதையடுத்து அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

    டிரைவர் பலி

    இந்த விபத்தில் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் மேச்சேரி காக்காச்சி வளவை சேர்த்த பச்சமுத்து மகன் மணி (வயது 28) சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். அந்த வேனில் வந்த டவர் அமைக்கும் வேலைக்கு சென்ற மேச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில், தங்கராசு, ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு குரங்குசாவடியில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிகிச்சை

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவர் மணி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் நள்ளிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் இல்லாமல் சில்லென்று காற்று வீசி வந்தது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசான மழையாக பெய்ய தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழையாக கொட்டியது. இந்த மழையால் ஏற்காட்டில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியது.

    தொடர்ந்து பனிமூட்டமும் அதிகளவில் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு ஊர்ந்தபடி சென்றன. கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது. இதில் மல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மா ளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதுபோல் வேம்படி தாளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை நகர். காந்திநகர், தப்ப குட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்கா பாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு செயற்பொறி யாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது.
    • இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    2 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. உதான்-5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணியளவில் பெங்களூரில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 34 பயணிகள் வந்தனர். தொடர்ந்து இங்கிருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு செல்லும் விமான சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த விமானத்தில் சேலத்தில் இருந்து 16 பயணிகள் கொச்சின் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ஓசூர் பிரகாஷ், சேலம் கலெக்டர் கார்மேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, செல்வகணபதி, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறும்போது விமானம் கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும். இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29-ம் தேதி பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்த டத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஐதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என கூறினார்

    பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த பயணி வக்கீல் மணிகண்டன் கூறும்போது, முதல் நாள் விமானத்தில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உதான் திட்டத்தின் மூலம் விமான சேவையை சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார். மேலும் விமான சேவை மீண்டும் செயல்படுத்திய விமான நிறுவனம், எம்.பி. உள்ளிட்டவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

    • சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்ளது.

    இங்கு 200 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. நேற்று வரை 34 விசாரணை கைதிகள், 4 தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம் 38 பேர் உள்ளனர் .

    நேற்று சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் மாவட்ட சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    கைதிகளுக்கு உணவு வழங்குதல், உணவு தரம், உணவு பட்டியல் குறித்து கேட்டறிந்தனர். சிறையில் அடைத்து வைத்துள்ள கைதிகளின் பாதுகாப்பு, குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதுகுறித்து சிறை போலீசார் கூறுகையில், சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர். சமீபத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமரா செயல்பாடுகள், பாதுகாப்பு, எந்த வகை உணவு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வு நடந்தது என கூறினர்.

    • வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசக்தியை தீவிரமாக தேடி வந்தனர்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே குட்டிகரடு பகுதியை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி முருகன் (வயது 35). இவரது மனைவி சிவசக்தி (31). இந்த தம்பதிக்கு சரிமளா (10), அனிஷா (7), நிஷாந்த் (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விடியற்காலையில் வீட்டில் இருந்து சிவசக்தி திடீரென மாயமானார். இதையடுத்து கணவர் முருகன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசக்தியை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு முருகன் வீட்டிற்கு அருகே உள்ள அவரது உறவினர் ராஜி என்பவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சிவசக்தி நீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தண்ணீர் தொட்டியில் கிடந்த சிவசக்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிவசக்தி எதற்காக அங்கு வந்தார்? எவ்வாறு தண்ணீரில் மூழ்கி இறந்தார்? என்பது குறித்து உறவினர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • அஜித்குமாரை வழக்கமாக வேலைக்கு அழைத்து செல்லும் நபர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றார்.
    • சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் அஜித்குமார் (26), தச்சு தொழிலாளியான இவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஜோதி (22)என்ற பெண்ணை காதலித்து வந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அஜித்குமார், மனைவி ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அப்போது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஜோதி அம்மாப்பேட்டை பழனியாண்டி மருத்துவமனை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் நள்ளிரவில் அஜித்குமார் வேறு ஒருவரிடம் செல்போனை வாங்கி மனைவியிடம் பேசினார். அப்போது மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் ஜோதி மறுத்ததுடன் காலையில் வந்து விடுவதாக கூறினார்.

    இந்தநிலையில் அஜித்குமாரை வழக்கமாக வேலைக்கு அழைத்து செல்லும் நபர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அஜித்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதனை பார்த்த அவர் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் கதறினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதனை செய்த போது அஜித்குமார் இறந்து விட்டது தெரிய வந்தது.

    பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 13 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.

    ஏற்கனவே வழக்கமாக யார் பூைஜ செய்தார்களோ அந்த பூசாரிகளே பூஜை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் சார்பில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமிக்க வேண்டும் என அமைதிபேச்சுவார்தையில் தீர்வு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.

    இதையடுத்து மற்றொரு தரப்பினர் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமித்து பூைஜ நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெளிநடப்பு செய்தவர்கள் நாங்களும் பூசாரி நியமித்து பூைஜ செய்கிறோம் என கோரிக்கை வைத்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழா முடிந்து பிறகு அமைதி பேச்சுவார்தை நடத்தி யாரை நியமிக்கலாம் என முடிவு செய்யலாம் என தெரிவித்தனர்.

    இதனால் மோதல் ஏற்பட்டு விடாமல் இருக்க முன்எச்சரிக்கையாக கோவில் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    ×