என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் தவிப்பு"
- தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் லட்சக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொழிலாளர்களுக்கு ஊதியம் கடந்த 3 மாத காலமாக அனுப்பி வைக்காததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மகுடஞ்சாவடி:
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் லட்சக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான ஊதியம் நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
3 மாதங்களாக...
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரி, வைகுந்தம், ஆ.தாைழயூர், காளிகவுண்டம் பாளையம் உள்ளிட்ட ஊராட்சி களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கடந்த 3 மாத காலமாக அனுப்பி வைக்காததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று சம்பளம் வரும், நாளை சம்பளம் வரும் என்று காத்தி ருந்தபடி உணவு மற்றும் மருந்து, மாத்திரை கூட வாங்க பணமின்றி தவித்து வருகின்றனர்.
இது குறித்து கன்னந்தேரி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூறியதாவது:-
எங்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இது குறித்து மேற்பார்வையாளரிடம் கேட்டபோது எங்களுக்கு எதுவும் தெரியாது. பஞ்சா யத்து தலைவரிடம் கேளுங்கள் என்கின்றனர். அங்கு சென்று கேட்டால் உங்களது வங்கி கணக்கிற்கு விரைவில் பணம் வந்து சேரும் என கூறுகிறார்கள். ஆனால் இதுவரையிலும் ஊதியம் வரவில்லை.
இருப்பினும் நாங்கள் வயிற்று பசியோடு தொடர்ந்து ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் வேலை செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உடனே ஊதியம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் அரசு அலுவலகங்கள் முன்பு அரசு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






