இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை

தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவிஅவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

குடிப்பழக்கம் உள்ள முருகன் வீட்டில் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா (50) தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Salem District News, இளம்பெண், தற்கொலை, ஆர்.டி.ஓ., விசாரணை, Young girl, suicide, RDO, Investigation

X

Maalai Malar
www.maalaimalar.com