என் மலர்
சேலம்
- அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
சேலம்:
சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
முதல்- அமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதகரிகத்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்றும் இந்த ஆண்டும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தக திருவிழா வருகின்ற 22.11.2023 (புதன்கிழமை) தொடங்கி 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) வரை 12 நாட்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.
இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சி கள் நடத்திடவும், மாணவர்க ளுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளர்களின் படைப்பு களைக் கொண்ட விற்பனை யகங்கள் அமைத்திட வும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
- ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சில பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்ற குண்டுமல்லி ரூ.700-க்கு விற்பனை யானது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்ற சன்னமல்லி ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், ஜாதிமல்லி ரூ.280-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும், கலர் காக்கட்டான் ரூ.360-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.440-க்கும், நந்தியாவட்டம் ரூ.400-க்கும் விற்பனையானது.
விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
- பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சேலம்:
பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் த்திற்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
குழு அமைப்பு
சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களை தொடர் ஆய்வு செய்து கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாது காப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளை தயாரிப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வு களை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக் குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
11 நிறுவனங்கள்
சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப் படாமல் செயல்பாடற் றுள்ள 11 நிறுவன ங்களுக்கு விளக்கம் கோரி உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள பட்டாசு வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்படும். மாவட் டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அனுமதிக் கப்பட்ட இடங்களில் அனுமதிக்க ப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதி மீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
643 விண்ணப்பங்கள்
இதுவரை தீபாவளிக் கென தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப் பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் பட்டாசு தயாரிப் பாளர்கள், விற்பனை யளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர்.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர்.
சேலம்:
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.
இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக சென்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயில் பகுதியில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் அதனை மீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
- சேலம் குகை நல்லாயி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
- உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் பார்த்தும் குணமாக வில்லை.
சேலம்:
சேலம் குகை நல்லாயி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். பல ஆஸ்பத்திரிகளில் பார்த்தும் குணமாக வில்லை. இதனால் மனம் உடைந்த வெங்கடேசன்நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தொங்கினார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது.
- இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
சேலம்:
ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது. அதற்கு முந்தைய நாட்களான சனிக் கிழமையான இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அலை மோதிய கூட்டம்
இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் இருந்தது.
குறிப்பாக சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், புதுச்சேரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.
இதே போல சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்ற பஸ்களிலும் கூட்டம் அலை மோதியது. இதையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், தனியார் ஆம்னி பஸ்களும் வெளியூர்களுக்கு அதிக அளவில் இயக்கப்பட்டதாலும் புதிய பஸ் நிலையத்தை சுற்றி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல தென் மாவட்டங்களுக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழி யர்களின் வாகனங்கள் சென்றதால் ஏ.வி.ஆர். ரவுண்டானா, திருவாக்க வுண்டனூர், கந்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அதிக அளவில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.
ரெயில்கள்
இேத போல சேலம் வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவைக்கு சென்ற ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது . முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர். இன்றும் அனைத்து ரெயில்களிலும் அதே நிலை நீடித்தது.
- பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
- 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாரமங்கலம்:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
- கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
மேலும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்காததாலும் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந்தேதி 30 அடியாக குறைந்தது. இதனால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 5 ஆயிரத்து 132 கனஅடியாக குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.33 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
- நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
- நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
சேலம்:
சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
- பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
சேலம்:
சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ேமலும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது .
இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங்களில் ரெடிேமடு சுகாதார வளாகங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தும் வகையில் பைப் லைன் அமைக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Salem District News, சேலம், மாநகராட்சி, 11, சுகாதாரம், வளாகங்கள், Salem, Corporation, 11, Health, Complexes,
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
- அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
சேலம்:
ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் என்.சபீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் 2024-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலம் வரும் 31ந்தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு ஆன்லைன் முறையிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை. உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளு மாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






