search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடகாவை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 30 பேர் கைது
    X

    கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    கர்நாடகாவை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 30 பேர் கைது

    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர்.
    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சேலம்:

    காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.

    இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக சென்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயில் பகுதியில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் அதனை மீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×