தாரமங்கலம் வட்டார அளவிலான பள்ளிமாணவர்களுக்கு கலை திருவிழா

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாரமங்கலம் வட்டார அளவிலான பள்ளிமாணவர்களுக்கு கலை திருவிழா
Published on

தாரமங்கலம்:

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com