search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FOR STUDENTS"

    • பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
    • 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் கலந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
    • நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 பள்ளிகள் உள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14, 15, 16 -ந்தேதிகளில் காலை, மாலையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை இடைத்தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தேர்வுகள் துறை செய்து வருகிறது.

    • பாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி, திருச்செங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • தீ விபத்து போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் தீபாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி, திருச்செங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் தவமணி தலைமை வகித்தார். நிலைய அலுவலர் குணசேகரன் முன்னிலையில் தீ விபத்து போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, தீ தடுப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் புதிய பேருந்து நிலையம், சேலம் ரோடு ஆகிய பகுதிகளில் நிலைய பணியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • அரசு பள்ளியில் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
    • ஓசோன் படலம் மனித நடத்தைகளால் பாதிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்கும் முறைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு பள்ளியில் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஞானசேகரன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூமியை சுற்றியுள்ள ஓசோன் படலம் மனித நடத்தைகளால் பாதிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்கும் முறைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

    ஆங்கில ஆசிரியர் பூபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பெரியசாமி, வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • விழுப்புரத்தில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மேள தாளத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.
    • தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர். அதன்பின்னர் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசும் பல்வேறு சலுகைகளும், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் அளித்து வருகின்றது. இந்நிலையில் தரமான கல்விகளை அளித்து வரும் தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளியின் சேர்க்கையை கூட்டவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் அமைந்துள்ள வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சோழன் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி முதல்வர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேள தாளங்களுடன் மாணவ-மாணவிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகள் முதல் நாள் வகுப்பிற்க்கு மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர்.

    ×