திருச்செங்கோடு தீயணைப்பு துறை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி, திருச்செங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தீ விபத்து போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.
திருச்செங்கோடு அரசு பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
திருச்செங்கோடு அரசு பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் தீபாவளியை விபத்து இல்லாமல் கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி, திருச்செங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் தவமணி தலைமை வகித்தார். நிலைய அலுவலர் குணசேகரன் முன்னிலையில் தீ விபத்து போலி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தீ தடுப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் புதிய பேருந்து நிலையம், சேலம் ரோடு ஆகிய பகுதிகளில் நிலைய பணியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com