விழுப்புரத்தில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை மேள தாளத்துடன் வரவேற்ற பள்ளி நிர்வாகம்

விழுப்புரத்தில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மேள தாளத்துடன் பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர்.
 வாத்தியங்கள் முழங்கள் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் வரவேற்கப்பட்டனர்.
 வாத்தியங்கள் முழங்கள் பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் வரவேற்கப்பட்டனர்.
Published on

விழுப்புரம்:

தமிழகத்தில் கொரேனா காலங்களில் தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்தனர். அதன்பின்னர் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

இதையொட்டி மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசும் பல்வேறு சலுகைகளும், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் அளித்து வருகின்றது. இந்நிலையில் தரமான கல்விகளை அளித்து வரும் தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளியின் சேர்க்கையை கூட்டவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் அமைந்துள்ள வி.ஆர்.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சோழன் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி முதல்வர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேள தாளங்களுடன் மாணவ-மாணவிகளை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகள் முதல் நாள் வகுப்பிற்க்கு மிகுந்த உற்சாகத்துடன் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com