என் மலர்
உள்ளூர் செய்திகள்

துக்கியாம்பாளையம் அரசுப்பள்ளியில் ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்திய மாணவர்கள்.
துக்கியாம்பாளையம் அரசு பள்ளியில் ஓசோன் படலம் பாதுகாப்பு தின விழிப்புணர்வு விழா
- அரசு பள்ளியில் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
- ஓசோன் படலம் மனித நடத்தைகளால் பாதிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்கும் முறைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு பள்ளியில் சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஞானசேகரன், உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பூமியை சுற்றியுள்ள ஓசோன் படலம் மனித நடத்தைகளால் பாதிக்கப்படுவது குறித்தும், இதனை தடுக்கும் முறைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
ஆங்கில ஆசிரியர் பூபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பெரியசாமி, வெண்ணிலா ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.






