search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The price of flowers has gone up"

    • சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
    • ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சில பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்ற குண்டுமல்லி ரூ.700-க்கு விற்பனை யானது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்ற சன்னமல்லி ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், ஜாதிமல்லி ரூ.280-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும், கலர் காக்கட்டான் ரூ.360-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.440-க்கும், நந்தியாவட்டம் ரூ.400-க்கும் விற்பனையானது.

    விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.

    ×