என் மலர்
நீங்கள் தேடியது "கபடிப் போட்டி"
- கபடிப் போட்டியில் சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
- மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றது.
வெற்றி பெற்ற கபடி அணி வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி, சிறப்பு பயிற்றுனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு, வேளாண்மை ஆத்மா குழுத் தலைவர் சக்கரவர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், முருகேசன், குணாளன், கோபிநாத், ரமணி மற்றும் ஆசிரியர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.






