என் மலர்
ராமநாதபுரம்
- ஐப்பசி அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.
- போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்
இந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான புண்ணிய தலங்களாக காசியும், ராமேசுவரமும் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாத அமா வாசையின் போதும் முன்னோர்களுக்கு தர்ப் பணம் கொடுப்ப தற்காக ராமேசுவரத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.
தீபாவளியை ஒட்டி வரும் ஐப்பசி மாத அமா வாசையும் முன்னோர்க ளுக்கு தர்ப்பணம் கொடுப் பதற்கு முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை இன்று மாலை வரை உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை யொட்டி விடுமுறை உள்ளதால் அதிகளவில் குடும்பத்துடன் பக்தர்கள் ராமேசுவரம் வந்தனர். பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்ததால் ராமேசுவரம் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட னர். மேலும் அக்னி தீர்த்த கரையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் குடும்பத்துடன் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி முன் ேனார்களை வழிபட்டனர்.
இதனால் அக்னி தீர்த்த கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.
- கண்மாய்- கால்வாய்கள் புனரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது கீழ் வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார் கோவில் மற்றும் பார்த்தி பனூர் பகுதியில் கீழ்வைகை வடி நிலக்கோட்டம் மூலம் தமிழ்நாடு பாசன வேளாண் மை நவீனப்படுத்தும் திட்டத் தின் கீழ் புணரமைக்கப்பட்ட கால்வாய்கள் மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட கலெக் டர் விஷ்ணு சந்திரன் பார் வையிட்டு ஆய்வு செய் தார்.
இந்த ஆய்வின்போது நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் ஒன்றியத்தில் வைகை ஆற்றின் கீழ் உள்ள பார்த்திபனூர் நீர் ஒழுங்கி யின் இடது பிரதான கால் வாய் நெடுகை 22.20 முதல் 45.00 கிலோமீட்டர் வரை மேல் மற்றும் கீழ் நாட்டார் கால் பிரிவு வாய்க்கால்களை ரூ. 30.50 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வருவதை பார் வையிட்டார்.
மேலும் பிரதான கால் வாயில் 4 ரெகுலேட்டர்கள், 35 தலைமதகுகள், 1 பாலம், 1 விழிந்தோடி, 1 சுரங்கப் பாதை போன்ற கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை பார்வை யிட்டார். மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வைகை அணை முழு கொள்ளளவு எட்டியுள்ள தையொட்டி பார்த்திபனூர் மதகு அணை மற்றும் ராம நாதபுரம் பெரிய கண் மாயினை பார்வையிட்டார். பின்னர் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது கடலுக்கு செல்வதை தடுத்து பாசனக் கண்மாய்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் திட்ட மிடுதல் வேண்டுமென அலு வலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கீழ் வைகை வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கார்த்தி கேயன், உதவி செயற்பொறி யாளர் கார்த்திகேயன் மற் றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி கலெக்டர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்தி பனூர்-மருச்சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் எம்.எல்.ஏ.க்கள் செ. முருகேசன் (பரமக்குடி), காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் (ராமநாதபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.
முன்னதாக இந்த முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி மதுரையிலிருந்து ராமநாதபு ரம் மாவட்டத்திற்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் நுழைவு பகுதியான மருச் சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை வரவேற்கப்பட்டதுடன் முத் தமிழ்த்தேர் அலங்கார ஊர் தியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞரின் திருவுரு வச்சிலைக்கு கலெக்டர் பா. விஷ்ணு சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் முருகேசன், காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் வனத்துறையின் மூலம் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மரக்கன்றுகள் நடும் பணி யினை கலெக்டர் விஷ்ணுசந் திரன் மற்றும் எம்.எல். ஏ.க்கள் நடவு செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலைஞர் நூற் றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பேனா வழங்கினர்.
விழாவையொட்டி நாதஸ்வர நிகழ்ச்சி, சிலம் பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பின்னர் முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி ராமநாதபுரத்திற்கு வருகை தந்து ஏராளமான பொது மக்கள் அலங்கார ஊர்தியி னையும் அதன் உள்ளே உள்ள டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் பார்வையிட்டு சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பர மக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட வனஅலுவலர் எஸ்.ஹேம லதா, பரமக்குடி நகர் மன் றத்தலைவர் சேது கருணா நிதி, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.–கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்த லைவர் கே.டி.பிரபாகரன்,
ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாபதி, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, அச்சுந் தன்வயல் ஊராட்சி மன்றத்த லைவர் சசிகலா அவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஓ.பி.எஸ். அணி சார்பில் உச்சிப்புளியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழக முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் வழிகாட்டுதலின் பேரில் மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நொச்சி ஊரணி முனியசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அஸ்லாம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி செயலாளர் சிவா வரவேற் றார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சீனிமாரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளு மன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று ஆதரிக்கும் அணியின் வேட்பாளர் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
- பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார்.பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் கர்ண மஹாராஜா வரவேற்றார்.
கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலமாக புதியதாக 20 இடத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பு சம்பந்தமாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த நிறுவனத்தின் மூலமாக இப்பணி செய்தால் ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் வாழ்வதற்கே பயனற்றதாக ஆகிவிடும். இது போன்ற மக்கள் விரோத மற்றும் இயற்கை வளங்களை அழிக்கக்கூடிய மண் வளங்களை அழிக்க கூடிய இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யும் பட்சத்தில் குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகிவிடும்
ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். எனவே இந்தத் திட்டத்தை ஒருபோதும் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்த விடாது.
ஆகவே இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அதை மீறி நமது மாவட்டத்தில் இத்திட்டத்தை கொண்டு வந்தால் அனைத்து சமுதாயத் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மக்களவை உறுப்பினர் தலைவர் அன்புமணி ராமதாசை அவர்களை வரவழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது
இக்கூ ட்டத்தில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, திருவாடானை ஒன்றிய செயலாளர் மக்தூம் கான். ராமாபுரம் ஒன்றிய செயலாளர் ஷரீஃப்.
மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வழுதூரில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அந்நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை செயல்ப டுத்துவதற்கு மக்களின் எதிர்ப்பு இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
- பாம்பன் பாலம் அருகே கடற்கரை பூங்காவில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- வருகிற 21-ந்தேதி மீனவர்தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி கடல் உணவு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் பாம்பன் பாலம் அருகே உள்ள கடற்கரை பூங்காவை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பூங்காவில் வைக்கப் பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்கள், விளை யாட்டு உபகரணங்கள், மின்விளக்குகள் வசதிகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கூடுதலாக உபக ரணங்கள் அமைக்கவும், மின்விளக்குகள் அமைக்க வும், சுற்றுச்சுவரை சீர மைத்து வர்ணம் பூசி ஓவியங்கள் தீட்டி பொது மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் அமைக்க வேண்டுமென அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
வருகிற 21-ந்தேதி மீனவர்தினம் கடைபிடிக் கப்படுவதையொட்டி இங்கு மாபெரும் கடல் உணவு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு வகையான கடல் உணவுகள் தயாரித்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
கடல் உணவுப் பொருட் களின் சிறப்புகளை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடல் உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. கடல் உணவு அரங்கத்தை பார்வை யிடவும், விதவித மாக உணவுகளை சாப்பி டவும் ஏராளமானோர் வரு வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
இந்த ஆய்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) அருண்பிரசாத், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது.
- முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.மாடசாமி முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்ட மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
அப்போது ஹைட்ரோ கார்பன் தொடர்பாக பாதிப்புகள், தீமைகள் குறித்து அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க 20 கிலோ மீட்டர் முதல் 25 கி.மீ. வரை நிலம் கையகப்படுத்தப்படும். இதனால் குடியிருப்புகள், வரலாற்று சின்னங்கள், கோவில்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படும்.
மாவட்ட மக்கள் 75 சதவீத நிலப்பரப்பை இழந்த வெளியேறும் சூழல் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாக மாறும். பெண்கள் கருவுற்றல் பாதிக்கப்படும். தொற்று நோய் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். இது போன்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்று திறனாளி உதவித்தொகை ஆணைகள், 4 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை ஆணைகள், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆணை, 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள், 4 பயனாளி களுக்கு முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 26,585 மதிப்பிலான விலை யில்லா தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு ரூ. 10,036 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள்,
வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 690 மதிப்பிலான தென்னங் கன்று திரவ உயிரி உரங்களையும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.800 மதிப்பிலான மரக்கன்றுகள் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு 1.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
முன்னதாக அரசு துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் , ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்ட 26 பேர் இன்று 3-வது முறையாக ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சில நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற மீனவர்கள் 64 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்ட 26 பேர் இன்று 3-வது முறையாக ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 22 மீனவர்களுக்கு வருகிற 15-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். 4 மீனவர்களை மட்டும் நீதிபதி விடுதலை செய்தார்.
அப்போது மீண்டும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் சில நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருவாடானை அருகே சமத்துவபுரத்தில் தொடக்கப்பள்ளி, குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
- பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவாடானை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சமத் துவபுரம் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையாக கழிவுநீர் மற்றும் வடிகால் கால்வாய் வசதிகள் அமைக்காததால் தற்போது பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக வீடுகளுக் குள்ளும் வீடுகளை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் குடியிருக்க முடியாமல் அப்பகுதி மக் கள் பரிதவித்து வருகின்ற னர். மேலும் அங்குள்ள குழந்தைள் மற்றும் பெரிய வர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் மாணவர் கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் கண்துடைப் பிற்கு மட்டுமே வந்து பார் வையிட்டு செல்வதாகவும் எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- ராமநாதபுரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
- தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் ஆட்டு வியாபாரிகள், கசாப்பு கடைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் அதிகமாக கூடினர். இதே போல் வீடுகளில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழி விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது. இதனால் சந்தை களை கட்டியது.
வழக்கத்தை விட ஆடுகளின் விலை அதிக மாக உள்ளதாக கசாப்பு கடை வியாபாரிகள் தெரி வித்தனர். ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டது. இன்று மட்டும் ஆடுகள், நாட்டுக் கோழிகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ராமநாதபுரத்தில் மின்வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- சென்னை தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீழக்கரை
கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்ராகிம். இவர் ராமநாதபுரம் மாவட்ட மின் வாரிய பொது தகவல் அதிகாரிக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் மின்வாரியம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு தகவல் பெற மனு அளித்தார்.
ஆனால் அதற்கான பதில் ஏதும் வராத நிலையில் 26.01.2021 அன்று சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இந்த வழக்கு விசார ணைக்காக அவர் 2 முறை வீடியோ கான்ப்ரண்ஸ் மூலமும் 3 முறை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.
இதன் தொடர்ச்சியாக விசாரணை முடிந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்ட கேள்விக்கு தகவல் தராத ராமநாதபுரம் மாவட்ட மின் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மனுதாரர் செய்யது இப்ராஹிமுக்கு உடனடியாக அவரின் கேள்விக்கு பதிலளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின்படி, கீழக்கரை உதவி மின் பொறியாளர் ரூ.10 ஆயிரத்தை அபராத மாக செலுத்தினார்.






