52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்று திறனாளி உதவித்தொகை ஆணைகள், 4 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை ஆணைகள், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆணை, 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள், 4 பயனாளி களுக்கு முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 26,585 மதிப்பிலான விலை யில்லா தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு ரூ. 10,036 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள்,

வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 690 மதிப்பிலான தென்னங் கன்று திரவ உயிரி உரங்களையும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.800 மதிப்பிலான மரக்கன்றுகள் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு 1.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

முன்னதாக அரசு துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் , ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com