search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carriage"

    • ராமநாதபுரத்தில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி கலெக்டர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்தி பனூர்-மருச்சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் எம்.எல்.ஏ.க்கள் செ. முருகேசன் (பரமக்குடி), காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் (ராமநாதபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.

    முன்னதாக இந்த முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி மதுரையிலிருந்து ராமநாதபு ரம் மாவட்டத்திற்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் நுழைவு பகுதியான மருச் சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை வரவேற்கப்பட்டதுடன் முத் தமிழ்த்தேர் அலங்கார ஊர் தியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞரின் திருவுரு வச்சிலைக்கு கலெக்டர் பா. விஷ்ணு சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் முருகேசன், காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வனத்துறையின் மூலம் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மரக்கன்றுகள் நடும் பணி யினை கலெக்டர் விஷ்ணுசந் திரன் மற்றும் எம்.எல். ஏ.க்கள் நடவு செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலைஞர் நூற் றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பேனா வழங்கினர்.

    விழாவையொட்டி நாதஸ்வர நிகழ்ச்சி, சிலம் பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பின்னர் முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி ராமநாதபுரத்திற்கு வருகை தந்து ஏராளமான பொது மக்கள் அலங்கார ஊர்தியி னையும் அதன் உள்ளே உள்ள டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் பார்வையிட்டு சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பர மக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட வனஅலுவலர் எஸ்.ஹேம லதா, பரமக்குடி நகர் மன் றத்தலைவர் சேது கருணா நிதி, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.–கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்த லைவர் கே.டி.பிரபாகரன்,

    ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாபதி, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, அச்சுந் தன்வயல் ஊராட்சி மன்றத்த லைவர் சசிகலா அவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் ஆடிமாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும்.
    • இந்த திருவிழாவில் ஆண்களே பெண்வேடமிட்டு வருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 வரையான வண்டிகள் தயார் செய்யப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஆடிமாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும். ஆடித் திருவிழாவின் போது, சேலம் குகை ஸ்ரீமாரியம்மன், காளியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ்பெற்றுவிளங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

    இதில் கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் கடவுள் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவது தான், வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பம்சம். திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு இருந்து கடவுள் உருவங்களைத் தரித்து, வண்ண வண்டிகளில் வலம் வருவர்.

    பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். பெண்கள் இந்நிகழ்வில் பங்குபெறுவதில்லை. ஆண்களே பெண்வேடமிட்டு வருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 வரையான வண்டிகள் தயார் செய்யப்படும்.

    அந்த வண்டிகளில் மின் விளக்குகளால் அலங்கரித்து ஒளி, ஒலி அமைப்புகள் செய்யப்படும். அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குகை கோவிலை 3 முறை சுற்றி செல்லும். குகை மாரியம்மன் கோவிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    வேண்டியது நிறை வேறியதும் பக்தர்கள் வண்டி வேடிக்கையில் கடவுள் வேடத்தில் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வண்டிகளில் பக்தர்கள் வேடமிட்டு வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.

    பக்தர்கள், சிவன், பார்வதி, லட்சுமி, விநாயகர் முருகன் ஆகியோர் கைலசாத்தில் அமர்ந்திருப்பதை போலவும், ரதி மன்மதன் வேடம், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும், வண்டியில் ஊர்வலமாக செல்வர். மேலும், அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், கிருஷ்ணன், நரசிம்மன் இரணியனை வதம் செய்தது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலட்சி , வள்ளி, தெய்வானை வேடம் ஆகியவை மிகவும் நேர்த்தியாகப் காட்சிப்படுத்தப்படும்.

    இந்த நிகழ்ச்சி நாளை மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். சேலம் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை, குழந்தை களுடன் கண்டுகளிப்பர். இன்று மாலை குகை மாரியம்மன்,காளியம்மன் கோவிலில் தீ மிதி நடக்கிறது.

    ×