என் மலர்
ராமநாதபுரம்
- தொண்டியில் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- 250 ஏழை குடும்பங்களுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை த.மு.மு.க.வினர் வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரூர் தலைவர் சையது அப்துல் காதர் தலைமையில் 250 ஏழை குடும்பங்களுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை த.மு.மு.க.வினர் வழங்கினர்.
மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜிப்ரி, தி.மு.க. பேரூர் செயலாளர் இஸ்மத்நானா, தொண்டி பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சுலைமான், ம.ம.க. மாவட்ட துணைசெயலாளர் தொண்டி ராஜ், ஒன்றிய செயலாளர் காமராஜ், செயலாளர் பரக்கத் அலி, த.மு.மு.க. பொருளாளர் மைதீன், துணை தலைவர் ஹம்மாது சலிம் அப்துல்லா, அப்துல்ரஹிம் மவ்லானா இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நடப்பாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், எம்.பி. நிதி, எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். அந்தந்த ஆண்டிற்குரிய ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் அந்த நிதியாண்டிலேயே முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் பயனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களின் முக்கிய தேவைகளுக்கான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதில் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
- பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிைறவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 9 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருவாடானை அருகே பாய்மர படகு போட்டி நடந்தது.
- முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
திருவாடானை அருகே உள்ள திருப்பாலைக்குடி யில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய் மர படகு போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன.
படகு ஒன்றுக்கு 6பேர் வீதம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இப்போட்டிக்கு 5நாட்டிக்கல் மைல் தொலைவு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காற்றின் வேகத்தில் படகுகள் ஒன்றை ஒன்று முந்தி சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இப்போட்டியை காண ஏராளமான பொது மக்கள் வெளியூர்களில் இருந்து வந்திருந்தனர். முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசை மோர் பண்ணை நற்குணம் படகும், 2-ம் பரிசை திருப்பாலைக்குடி ராஜாங்கம் படகும், 3-ம் பரிசை தொண்டியை சேர்ந்த எம்.சி. படகும், 4-ம் பரிசை நம்புதாளையைச் சேர்ந்த செல்வம் படகும், 5-ம் பரிசை மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் படகும் பெற்றன.
- பூங்கா அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
- ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் பட்டணம் காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து சேதுபதி நகர் முதல் தெருவில் ரூ.23.24 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி உள்ளதை பார்வையிட்டு வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.சேதுபதி நகர் நீரேற்று நிலையம் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் புதிதாக நீடிப்பு செய்யும் பணி ரூ.23.19 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள உள்ளதையொட்டி அதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட இந்த பணியை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் பட்டணம் காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா பகுதிக்கு சென்று வெளிப்புற பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
- முதல்வர் கொண்டு வந்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி தொடர் போராட்டம் நடத்துவோம்.
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி தியாகி இமானு வேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இமானுவேல் சேகரனின் குடும்பத்தினருடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி வரவேற்பதுடன் கவர்ன ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், தியாகி இமானு வேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9-ந் தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
பரமக்குடி 5 முனை சந்திப்பில் இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.தமிழகத்தில் சாதி, மத பாகு பாடின்றி அனைத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்ட சபையில் கிறிஸ்த வர்களாக மதம் மாறியோரை பட்டியல் இனத்தில் சேர்த்து பட்டியல் இன மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்காக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை ராம நாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி கண்டிக்கிறது. தமிழகத்தில் இரு பிரிவினரிடையே சாதி, மத மோதலை தூண்டும் தி.மு.க. அரசு தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டி ருப்பதை அந்த மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். ஓட்டு அரசியலுக்காக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி வரும் தி.மு.க. அரசு தனி சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அனுமதியுடனும், பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி ஒப்புதலுடனும், ராமநாத புரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகே சனின் வழிகாட்டல்படி ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
- கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் அறிவுரையின் பேரில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பபுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை ஏழைகளுக்கு வழங்கினர். 170 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, உணவு பொருட்கள் ரூ. 1லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய், 12 பேருக்கு ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரம், கல்வி உதவியாக ரூ.22 ஆயிரம், மருத்துவ உதவி 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பில் உதவிகளை மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா தலைமையில் கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதில் ம.ம.க. செயலாளர் பாலகிருஷ்ணன், த.மு.மு.க., ம.ம.க. பொருளாளர் நவீன் பாதுஷா, மூத்த நிர்வாகி செய்யது முகமது, கிளை நிர்வாகிகள் மதார், அர்ஜுணை குமார், கரீம் கனி,ஹபீப் ராஜா,பாருக் உசேன், ராஜா சலீம்,ரியாஸ், நாகூர் கனி, சேக், அஜாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீர்-மோர் பந்தல் அமைத்து கமுதியில் பயணிகள் போலீசார் தாகம் தணித்தனர்.
- இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை அனல்காற்று வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கமுதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாள்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூருக்கு செல்பவர்கள் பஸ் நிலையத்தில் நிற்கும் போது கடுமையான வெயில் தாக்கத்தி னால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் தற்போது நீர், மோர் அருந்தி தங்களது தாகத்தை தணித்து மகிழ்வுடன் செல்கின்றனர். இந்த நீர்மோர் பந்தல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இன்னும் 2 மாதங்கள் வரை இந்த நீர் மோர் பந்தல் செயல்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- சமூக நல்லிணக்க திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.
- இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
கீழக்கரை
கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் நிர்வாக சபை தலைவர் ரத்தின முகம்மது, உதவி தலைவர் அப்துல் ஹமீத் செல்ல வாப்பா ஆகியோர் கூறியதாவது:-
கீழக்கரையில் ஆண்டுதோறும் வடக்கு தெருவில் உள்ள மணல்மேட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் சமூக நல்லிணக்க ஒன்று கூடும் திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த அனைத்து சமுதாய பெண்கள் சமூக நல்லி ணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி தோழிகளை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மணல்மேடு பண்டிகை கால கொண்டாட்டத்தை நடத்த வடக்குத்தெரு ஜமாத் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை(22-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 10.30 வரை ரம்ஜான் பண்டிகை விழா நடைபெறும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்க ளுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் கடைகளும் ஏற்படுத்தப்படும். திடல் முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ராமேசுவரத்தை சேர்ந்த அரசபாண்டி என்ற மீனவர் 13 கி.மீ. தொலைவில் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
- இந்திய கடற்படை நடவடிக்கையை கண்காணிக்க பறக்கவிடப்பட்ட புறாவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ராமேசுவரம்:
இந்தியாவில் தென் எல்லையான ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் எல்லையை காத்து வருகின்றனர். அண்மை காலமாக இலங்கையில் இருந்து இந்தியாவின் நடவடிக்கையை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதற்காக இலங்கையில் உள்ள துறைமுகத்தை சீனா பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவில் அதிநவீன போர் கப்பல் யுவான், இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவை உளவு பார்க்க தான் என புகார் எழுந்தது. இதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தை சேர்ந்த அரசபாண்டி என்ற மீனவர் 13 கி.மீ. தொலைவில் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது படகில் ஒரு புறா தஞ்சமடைந்தது.
புறாவை மீட்ட மீனவர் அரசபாண்டி, அதனை ராமேசுவரத்தை சேர்ந்த புறா வளர்க்கும் ரகுவிடம் கொடுத்தார். புறாவின் கால்களில் சுதன், இலங்கை யாழ்ப்பாணம் என்றும், ஒரு தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருந்தது.
அந்த புறா ஹேமர் இனத்தை சேர்ந்த பந்தய புறா என்பதும், அது வானில் 300 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடியது என்றும் தெரியவந்தது. ஆகவே இலங்கையில் இருந்து பந்தயத்திற்காக பறக்க விடப்பட்ட புறா இங்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளையில் இந்திய கடற்படை நடவடிக்கையை கண்காணிக்க பறக்கவிடப்பட்ட புறாவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
- பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குளியல் சோப், சலவை சோப், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், தலைக்கு எண்ணெய், நாப்கின் அடங்கிய 'ஹெல்த் கிட்' எனப்படும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், தொண்டி பகுதி மேலாண்மைக்குழு உறுப்பினர் கமாலுதீன், கவுன்சிலர் அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.
இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
- ராமநாதபுரத்தில் ஜுடோ தேர்வு போட்டி 21-ந் தேதி நடக்கிறது.
- மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை ஜுடோ பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் ராமநாத புரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் வருகிற 21-ந் ேததி (வெள்ளிக் கிழமை) காலை 8 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுப் போட்டி யில் கலந்து கொள்பவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், சான்றளிப்பு கையொப்பத்துடன் சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவ, மாணவி களுக்கு பயிற்சியாளர் வாயிலாக தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் ஜுடோ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்பட உள்ளனர்.
தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது. இந்த வாய்ப்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






