search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வர் கொண்டு வந்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி  போராட்டம்
    X

    பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் 

    முதல்வர் கொண்டு வந்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம்

    • முதல்வர் கொண்டு வந்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி தொடர் போராட்டம் நடத்துவோம்.
    • ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி தியாகி இமானு வேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இமானுவேல் சேகரனின் குடும்பத்தினருடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி வரவேற்பதுடன் கவர்ன ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், தியாகி இமானு வேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9-ந் தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    பரமக்குடி 5 முனை சந்திப்பில் இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.தமிழகத்தில் சாதி, மத பாகு பாடின்றி அனைத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்ட சபையில் கிறிஸ்த வர்களாக மதம் மாறியோரை பட்டியல் இனத்தில் சேர்த்து பட்டியல் இன மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்காக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தை ராம நாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி கண்டிக்கிறது. தமிழகத்தில் இரு பிரிவினரிடையே சாதி, மத மோதலை தூண்டும் தி.மு.க. அரசு தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டி ருப்பதை அந்த மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். ஓட்டு அரசியலுக்காக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி வரும் தி.மு.க. அரசு தனி சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

    இல்லாவிட்டால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அனுமதியுடனும், பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி ஒப்புதலுடனும், ராமநாத புரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகே சனின் வழிகாட்டல்படி ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×