search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜுடோ தேர்வு போட்டி
    X

    ஜுடோ தேர்வு போட்டி

    • ராமநாதபுரத்தில் ஜுடோ தேர்வு போட்டி 21-ந் தேதி நடக்கிறது.
    • மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை ஜுடோ பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் ராமநாத புரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் வருகிற 21-ந் ேததி (வெள்ளிக் கிழமை) காலை 8 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுப் போட்டி யில் கலந்து கொள்பவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், சான்றளிப்பு கையொப்பத்துடன் சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    இதில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவ, மாணவி களுக்கு பயிற்சியாளர் வாயிலாக தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் ஜுடோ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்பட உள்ளனர்.

    தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது. இந்த வாய்ப்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×