என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாடானை அருகே பாய்மர படகு போட்டி
- திருவாடானை அருகே பாய்மர படகு போட்டி நடந்தது.
- முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
திருவாடானை அருகே உள்ள திருப்பாலைக்குடி யில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய் மர படகு போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன.
படகு ஒன்றுக்கு 6பேர் வீதம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இப்போட்டிக்கு 5நாட்டிக்கல் மைல் தொலைவு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காற்றின் வேகத்தில் படகுகள் ஒன்றை ஒன்று முந்தி சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இப்போட்டியை காண ஏராளமான பொது மக்கள் வெளியூர்களில் இருந்து வந்திருந்தனர். முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசை மோர் பண்ணை நற்குணம் படகும், 2-ம் பரிசை திருப்பாலைக்குடி ராஜாங்கம் படகும், 3-ம் பரிசை தொண்டியை சேர்ந்த எம்.சி. படகும், 4-ம் பரிசை நம்புதாளையைச் சேர்ந்த செல்வம் படகும், 5-ம் பரிசை மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் படகும் பெற்றன.






