என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- மனுக்களை வழங்கி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் மீனவர்களின் குறைகள் மற்றும் குறைகளை கேட்ட றிந்து பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். மீனவர்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கை களை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்க ளாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க கோருதல், மீனவர்கள் கடலில் இறந்ததற்கான இறப்பு நிவாரண தொகை பெற கோருதல், மீன்பிடித்தடை காலத்திற்கான உதவித்தொகை பெறுதல், பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்ய கோருதல், மீனவர்களுக்கான பல்வேறு வகையான உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.
அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக தீர்வு காண உத்தரவி டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக மாற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவிகள் என தொடங்கி அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக உருவாக்குவதற்கு செயல்பட்டு வருகின்றனர். இதில் மீனவர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மீனவர்கள் ஒவ்வொருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக உருவாக்குவதற்கு ஏதுவாக தனித்தனியாகவும், மீனவ சங்கம் சார்பிலும் மரக்கன்றுகளை கடலோர பகுதிகளில் நடுவதன் மூலம் மண் அரிப்பில் இருந்து காத்திடவும், சுகாதாரமான சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார் சிவக்குமார், கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பா.ஜனதா கட்சியினர் ‘திடீர்’ சாலை மறியல் நடத்தினர்.
- சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா தலைவராக தரணி முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து மாவட்டத்தில் பா.ஜன தாவை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பா.ஜ.க. தலைவராக இருந்த கதிரவன் தூண்டுதலின் பேரில் சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் தரணி முருகேசனை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கூலிப்படையினர் தாக்கியதில் தரணி முரு கேசன் மேலாளர் கணேசன் என்பவர் படுகாய மடைந்தார். அவர் ராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய நடவ டிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் தன்னை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபற்றி அறிந்த பா.ஜ.க.வினர் தரணி முருகேசன் தலைமையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் இது தொடர்பாக உரிய நடடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிடுங் கள் என்று கேட்டுக்கொண்ட னர். இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து டீனை மிரட்டியதால் அவர் கணேசனை டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
- ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
- 2 இடங்களில் தற்காலிக நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, கும்பகோணம், புதுக்கோட்டை,திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட ங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப் படுகிறது. இங்கு 6ஆயிரம் பேருக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்தும் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். பஸ் நுழைவு, வெளியேறும் பகுதியில் ஆபத்தான முறையில் காய்கறி, பழங்கள் விற்கின்றனர். பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.
இதையடுத்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையத்தை சீரமைக்கவும் சந்தை திடல் வரை விரிவு படுத்தவும் நகராட்சி திட்டமிட்டது.இதற்காக நகராட்சி நிர்வாகத்துறை முதற்கட்டமாக ரூ.20 கோடியில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளது.அடுத்த மாதம் விரிவாக்க பணிகளை தொடங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ் நிலையம் தற்போ தைய வாகன நிறுத்துமிடம் வரை வணிக வளாகத்துடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் முதற்கட்டமாக ரூ.20 கோடியில் தொடங்க உள்ளது. தொடர்ந்து கூடுதல் நிதியை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்.
விரிவாக்க பணிக்காக மகர் நோன்பு பொட்டல் வரை பஸ் நிலையம் வர உள்ளதாக தவறான தகவல்களை கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. பழைய பஸ் நிலைய பகுதி, ராம நாதபுரம்-மதுரை ரோடு பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய காலியிடம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர், நகராட்சி மண்டல இயக்குநரிடம் அனுமதி கேட்டுள் ளோம்.
அனுமதி வந்தபின் போக்குவரத்து அதிகாரிகள் போலீசாருடன் ஆலோசனை நடத்தி பஸ்கள் நிறுத்தப்படும். வழித்தடங்கள் மற்றும் பஸ் நிலைய இடமாற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- ராமநாதபுரம் நகரில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர் பட்டணம் காத்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்10-க்கும் மேற்பட்ட முறை குறைந்தது 5 நிமிடம் முதல் 10நிமிடங்கள் வரையும், சில நேரம் அரை மணி நேரத்திற்கு மேலாகவும் மின்தடை ஏற்படுகிறது.
கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீடுகளில் மக்கள் சிரமப்படுகின்றனர். பகல் நேரத்தில் இது போல் ஏற்படும் மின்தடையால் வணிக நிறுவனங்களில் தொழில் பாதிக்கப்படுகிறது.
காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் போது ஏற்படும் மின்தடையால் உணவுகளை தயார் செய்ய முடியவில்லை என்றும், பெண்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமிழந்து அவதிப்படுகின்றனர்.மின்வாரியம் முறையாக மின்சாரம் வழங்கவும் இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது.
- மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதேபோல் மற்ற பள்ளிகளிலும் இந்த மாணவ-மாணவிகளை போல் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இதில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், பள்ளிச் செயலாளர் ஜீவலதா, முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஏழைகளுக்கு ரம்ஜான் தொகுப்பு வழங்கப்பட்டது.
- பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு நோன்புப் பெருநாள் இலவச தொகுப்பு பொருட்கள் அருப்புக்கார தெரு ஜும்மா பள்ளிவாசலில் வழங்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டும் இந்த தொகுப்பில் புத்தாடை, மளிகை பொருட்கள், இறைச்சி,அரிசி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளிவாசலின் தலைவர் லியாகத்அலி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஆர்.டி.ஓ. சேக் முகமது,தொழிலதிபர் தீன் சேம்பர் அப்துல் முனாப், சமூக ஆர்வலர் பல் மருத்துவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொகுப்பு பொருட்களை வழங்கினர்.
பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் ஷமது, பொருளாளர் ஸ்டார் சீனி முகமது ஆகியோர் செய்திருந்தனர்.
- நம்புதாளையில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
- தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.
தொண்டி
தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார்.
ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குருஜி, மாவட்ட பார்வையாளாளர் முரளீதரன், ஒன்றிய தலைவர் துரை ஜெய பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய செய லாளர் கானாட்டாங்குடி சூர்யா, ஒன்றிய இளை ஞரணி பொதுச்செயலாளர் அ.மணக்குடி சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.மாவட்ட அமைப்புசாரா துணை தலைவர் ரத்னக் குமார் நன்றி கூறினார்.
பொதுமக்களுக்கு தர்பூசணி பழம், நீர், மோர் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அனுமதியின்றி சவடு மண் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- தினமும் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பெரிய கண்மாயில் 3 இடங்களில் ஒரே நபர் சவடு மண் எடுத்து 1 டிராக்டர் ரூ.600க்கு விற்பனை செய்து வருகிறார். அங்கு தினமும் ரூ.5 லட்சத்திற்கு சவடு மண் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முதுகுளத்தூர் கண்மாயில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் சவடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபடும் நபருக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்பட்டும் அதனை கட்டவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதுகுளத்தூர் கண்மாயில் விதிமுறையை மீறி ரூ.50 லட்சத்திற்கு சவடு மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் பெரிய கண்மாயில் ஜே.சி.பி. மூலம் சவடு மண் எடுத்து தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கடலாடி மலட்டாற்றில் மணல் ஆட்கள் மூலமே மண் எடுக்கப்பட்டு அரசு மணல் குவாரியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதுகுளத்தூர் பெரிய கண்மாயில் அனுமதியின்றி சவடு மண் எடுத்து தினமும் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அபிராமம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக 16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வெயில் சுட்டெறிக்க தொடங்கி விட்டது. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, தொண்டி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் உட்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இந்த ஆண்டு மேய்ச்சல் நிலங்களில் புல், செடி, கொடிகள் குறைவாக உள்ளதால் தேவையான இரை கிடைக்காமல் ஆடு, மாடுகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வந்தபோதும் கண்மாய்க ளுக்குச் செல்லும் நீர்வழி தடங்கள், கால்வாய், தடுப்பணைகள் சீரமைக்கப் படாததாலும் ஆக்கிரமிப்பு களாலும் பல கண்மாய்கள் வறண்டுள்ளன. மாவட் டத்தில் பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதால் மேய்ச்சல் நிலங்களும் வறண்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவகாலங்கள் மாறியதாலும், பருவமழை பொய்த்ததாலும் அடர்ந்த காடுகள் இருந்த இடங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.
இந்த காலகட்டத்தில் மரங்களை நம்பி வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.
இதுபற்றி அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மேய்ச்சல் நிலங்களும் வறண்டு உள்ளது. 10 கிலோ மீட்டர் முதல் 16 கிலோமீட்டர் தூரம் வரை சென்று ஆடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போதிய அளவு மேய்ச்சல் நிலம் இல்லாததால் ஆடு , மாடுகள் மிகவும் சிரமப்படுகிறது. இதே நிலைதொடருமானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களாக மேய்ச்சல் உள்ள பகுதியை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
- தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
- புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
கமுதி
முக்குலத்தோர் புலிப்ப டை கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து பலமுறை சட்ட பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதிவாரியாக கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியின ருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழ கத்தில் ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக் கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.
எனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கான ஆணையம் அமைத்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கமுதி கோட்டைமேட்டில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
- கடலோர காவல் படையில் வேலையில் சேர முன்னுரிமை வழங்கபடும்.
பசும்பொன்
ராமநாத புரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மீனவ கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி ஈசன், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறன் மேம் பாட்டு வகுப்புகளை ஆய்வு செய்தனர். 90 நாட்கள் உணவு, உறைவிடம், ஊக்க தொகை மாதம் ஆயிரம் உள்ளிட்டவை பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் வேலையில் சேர முன்னுரிமை வழங்கபடும்.
- காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு நடந்தது.
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோட்டை முத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறுபான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராகிம், மாவட்ட அமைப்பு சாரா தலைவர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சிக்கல் நகர் செயலாளர் அம்ஜத் கான், சிக்கல் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்தர், பச்சமால், நிர்வாகிகள் செய்யது இப்ராகிம், கனி, முனியசாமி, குமைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






