என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமலிங்க பிரதிஷ்டை விழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும்.

    27-ந் தேதி திட்டக்குடி சாலை சந்திப்பு அருகில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் ராமனுக்கு முக்தி அளித்த நிகழ்ச்சி நடைபெறும். 28-ந் தேதி தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலில் விபிச னருக்கு முடி சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    29-ந் தேதி ராமநாதசுவாமி கோவிலில் ராமர் புறப்பாடாகி வீதி உலா வந்து ராமநாதசாமி கோவிலில் ஆஞ்சநேயர் வேடமணிந்து ஆக்ரோ சத்துடன் ராமநாதன் சன்னதியை சுற்றி வலம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் மூலவர் சன்னதி யில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடைபெறும். இரவு 8 மணிக்கு ராமர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைநேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கள்ளச்சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம்.
    • அலுவலர்களின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கள்ளச் சாராயம் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் தடுப்பது மட்டுமின்றி கண்காணித்து வர வேண்டும். மேலும் அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வுதுறை ஆகிய துறை களின் அலுவலர்களின் தொலைபேசி எண்களை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    மேலும் காவல் துறையினரும்,வருவாய் துறை யினரும் ஒருங்கி ணைந்து கிராமப்பகுதிகளில் நாள்தோறும் கண்காணித்து வருவதுடன், பொது மக்களுக்கு கள்ளச்சாரா யத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    அதே போல் பொது மக்களும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் அரசுமதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அரசுஅனுமதித்த நேரங்களில் மட்டும் செயல்பட வேண்டும். அது மட்டுமின்றி அரசு நிர்ணயித்த விலையில் மனதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். இதைகாவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவ லர்கள் கொண்ட குழு நியமித்து அவ்வப்போது ஆய்வு செய்து தவறு செய்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயணசர்மா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், தாசில்தார்கள் செம்பக லதா, ராஜகுரு மற்றும் அரசுஅலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன.
    • 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இதற்கான விழா நேற்று 23-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்று காலை 5 மணி அளவில் கணபதி வழிபாடு, விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று, அன்று மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற்றன.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வேண்டுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று(புதன்கிழமை) சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு 7 மணிக்கு மேல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற உள்ளன.

    தொடர்ந்து 2-ந்தேதி காலை 7.20 மணிக்கு மேல் பால்குடம், காவடி, ரதகாவடி, சிலாகைக் காவடி, பறவை காவடி, மயில் காவடியும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளன. 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இதற்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர்கள் நா.சி.அ. சிதம்பரநாதன் ஆச்சாரி, மீ.ச. லோகநாதன் ஆச்சாரி ஆகியோர்கள் தலைமையில் கோவில் நிர்வாகஸ்தர்கள் தலைவர் யோகேஸ்வரன், உதவி தலைவர் நாகநாதன், செயலாளர் பாலமுருகன், உதவிச்செயலாளர் செல்வ முனிஸ்வரன், பொருளாளர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் இளைஞர்கள் செய்து வருகிறார்கள்.

    • ரேசன் கடைகள் கட்டிட பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள36 வார்டுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட வார்டுகளை உள்ளடக்கிய ஒரு ரேசன் கடை இருப்பதால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் ரேசன் கடை பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 21, 28 26 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பங்கேற்று ரேசன் கடை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இளநிலை பொறியாளர் சுரேஷ், 28-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, 30-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் மும்மூர்த்தி, நகர் மாணவரணி மகேந்திரன், 26-வது கவுன்சிலர் ராதா பூசத்துரை, சோலை செல்லப்பாண்டி, 21-வது வார்டு கவுன்சிலர் பிரபா சாலமன், வார்டு செயலாளர் வாணி குமார், நகர் மீனவரணி அமைப்பாளர் நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலச்செல்வனூரில் தெரு விளக்குகள்-மின் மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் மகரஜோதி கோபால கிருஷ்ணன். என்ஜினீயரான இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-

    மேலச்செல்வனூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அம்மன் கோவில் வரை ரூ.10 லட்சத்திலும், மேலச்செல்வனூர் யாதவர் தெருவில் ரூ.6.56 லட்சத்தி லும், அங்குள்ள அம்மன் கோவில் பகுதியில் இருந்து பிள்ளையார் கோவில் வரை ரூ.4 லட்சத்திலும், மேலச்செல்வனூர் மருது பாண்டியர்நகர் பகுதியில் ரூ.2.70 லட்சத்திலும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க ப்பட்டுள்ளது. மேலச்செல்வ னூர் யாதவர் தெருவில் 100 மீட்டரும், ஆதி திராவிடர் காலனி பகுதியில் 100 மீட்டரும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலச்செல்வனூர் பொது ஊரணியில் ரூ.4 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. ஊருணியில் படித்துறை ரூ.50 ஆயிரத்தில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. மேலச்செல்வனூர் கிராமத்தில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

    பொது மயானத்தில் ரூ 17 லட்சத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, காத்திருப்போர் கூடம், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல செல்வனூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம், கண்ணன் கோவில், ஆதி திராவிடர் தெரு, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனித்தனியாக பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

    மேலச்செல்வனூர் கிராமத்திலும், எம். எஸ். புது குடியிருப்புக்கும் தலா ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. எஸ் ஆலங்குளம் கிராமத்தில் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தேரங்குளம் கிராமத்தில் திறந்தவெளி கிணறு ரூ. 12 லட்சத்தில் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாப்பாக்குளம் கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    ஜல் ஜீவன் திட்டத்தில் மேலச்செல்வனூர் கிராமத்தில் 331 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. என.பாடு வனேந்தல் கிராமத்தில் 100 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கடையக்குளம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் மற்றும் பைப் லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேரங்குளம் கிராமத்தில் குடிநீர் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

    மேலச்செல்வனூர் அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் அறை கட்டிடம் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் பணி கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மேலச்செல்வனூர் ஊராட்சிக்கு நீதி ஒதுக்கி கீழ்க்கண்ட பணிகள் நடைபெற உதவ வேண்டும்.

    மேலச்செல்வனூர் கிராமத்தில் இருந்து மடத்தாகுளம் கிராமத்திற்கு புதிய சாலை அமைக்க வேண்டும். 2007-2008-ம் ஆண்டில் மேலச்செல்வனூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி கட்டிடம் இல்லாததால் அங்குள்ள தொடக் கப்பள்ளி கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குடிநீர் பற்றாக்குறையை போக்க மேலச்செல்வனூர் கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். எம்.எஸ்.புதுக்குடியிருப்பு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, தேரங்குளம் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி, பாப்பாகுளம் கிராமத்தில் 30 ஆயிரம் நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    பறவைகள் சரணாலயம் உள்ள மேலச்செல்வனூர் சுற்றுலா தலமாக உள்ளதால் அத்துறை சார்பில் இங்கு கழிப்பறை, ஓய்வு அறை, உணவு அருந்தும் கூடம் கட்டித்தர வேண்டும். மேலும் வருவாய் ஆய்வாளர் கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலச்செல்வ னூர் ஊராட்சி முழுவதும் தெரு விளக்குகள் விஸ்தரிப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    மேலச்செல்வனூர் மற்றும் எம்.எஸ்.புதுக்குடி யிருப்பு கிராமத்தில் திறந்த வெளி கிணறு அமைக்க வேண்டும். மேலச் செல்வனூர் கிராமத்தி ற்கு 2 மின்மாற்றிகள், எம்.எஸ்.புதுக்குடியிருப்புக்கு ஒரு மின் மாற்றி, கடையக்குளம் கிராம த்திற்கு ஒரு மின்மாற்றி அமைத்து கூடுதல் மின்சாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

    மேலச்செல்வனூர் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு பொது ஊரணி மற்றும் பறவைகள் சரணாலயம் கண்மாயில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்புதாளையில் தொழிற்பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
    • இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை மேற்கு பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி தலைமையில் தொழிற்பயிற்சிப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், பாரூக், சித்தி விநாயகம், முத்துசாமி, தாளாளர் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேற்கு பள்ளி ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்றார். இங்கு பள்ளி படிப்பை முடித்த பலருக்கும் இந்த பள்ளி பயனுள்ளதாக இருக்கும் என்று எம்.பி. பேசினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்.
    • புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு சந்திரன் பேட்டியளித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட கலெக்டராக விஷ்ணுசந்திரன் பதவி ஏற்றார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொதுவாக பிறந்த இடத்திற்கு மீண்டும் வருவதே ஒரு பெருமையாகும். அந்த அளவிற்கு நான் முதல் முதலாக 2015-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டு முதல் பணியாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோளட்டத்தில் சார்ஆட்சியராக 2 ஆண்டுகள் பணியாற்றினேன்.

    அதனை தொடர்ந்து நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டங்களில் சார் ஆட்சியராகவும், நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளராகவும், சென்னையில் நகராட்சி நிர்வாக இணை ஆணைய ராகவும் பணியாற்றி விட்டு முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்றுள்ளேன்.

    அரசின் திட்டங்களை கடைக்கோடிகிராமங்கள் வரைகொண்டு சென்று அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுவேன். குறிப்பாக இதற்குமுன் பணியாற்றிய கலெக்டர்களின் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவது மட்டுமின்றி, மேலும் சிறப்புடன் செயல்படுத்துவேன்.

    அதேபோல் இந்த மாவட்டம் எனக்கு பிறந்த வீடு போல் என்ற பெருமை உண்டு. காரணம், நான் முதல் முறையாக அரசு பணிக்கு பணியாற்றியது இந்த மாவட்டத்தில் தான். தற்பொழுது மீண்டும் இதே மாவட்டத்திற்கு கலெக்டராக வந்திருப்பது தாய் வீட்டுக்கு வந்ததுபோல் உள்ளது.

    இந்த மாவட்டத்தை பொறுத்த வரை மக்களின் தேவை என்ன என்பதை அறிவேன். முதல்- அமைச்சரை சந்தித்த போது அவர் பொதுமக்கள் நலன் கருதி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் திட்டங்களை செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்.

    கலெக்டர் என்ற முறையில் அனைத்து துறைகளுக்கும் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவதுடன், பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வேன். நாள்தோறும் என்னை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கும் பொது மக்களுக்கு உரிய தீர்வு கிடைத்திட செயல்படுவேன். என்னை பொறுத்தவரை பொதுமக்கள் நேரடியாக சந்திக்க எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். தொலை பேசியிலும் கோரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதிலும் செயல்பட்டு மக்களின் வளர்ச்சிக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ப செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தராது என்பது உண்மை.
    • தேர்வில் அதிக மார்க் வாங்கியவர்கள் வாழ்க்கையில் தோற்றதும் உண்டு.

    பரமக்குடி:

    தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டது, தோல்வி அடைந்துவிட்டோம் என கருதி மனம் உடையும் மாணவர்கள் பலர்.

    மதிப்பெண் ஒன்றுதான் வாழ்க்கை என்ற தவறான எண்ணத்தில், விபரீத முடிவெடுத்து மாணவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன. தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண் எடுக்கவில்லை என பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து தற்கொலை செய்தவர்களும் உண்டு. குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக பெற்றோர் திட்டியதால் உயிரை மாய்த்தவர்களும் உண்டு.

    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை தராது என்பது உண்மை. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், பிற்காலத்தில் மிகப்பெரிய பொறுப்புகளுக்கு வந்ததும் உண்டு. தேர்வில் அதிக மார்க் வாங்கியவர்கள் வாழ்க்கையில் தோற்றதும் உண்டு.

    தங்கள் மகன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், பாஸ் ஆகிவிட்டான். ஆனால், 4 பாடங்களில் 100-க்கு தலா 35 மார்க்தான் வாங்கி இருக்கிறான். அவனது மொத்த மதிப்பெண் 500-க்கு 185-தான் என நினைத்து, அந்த மாணவனின் பெற்றோர் வருத்தம் அடையவில்லை. அதுவும் ஒரு சாதனைதான் என நினைத்து மகனை கொண்டாடி இருக்கிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் இன்னும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடு என உற்சாகப்படுத்தி உள்ளனர்.

    அந்த மாணவனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் சொந்த ஊர். பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்துவந்தார். 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 35 மதிப்பெண்களும், அறிவியலில் மட்டும் 45 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 185 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவனின் பெற்றோர் மகன் தேர்ச்சி அடைந்ததை நினைத்து மகிழ்ந்தனர். உறவினர்கள், நண்பர்களை அழைத்து விழா எடுத்தனர். மகன் கையால் கேக் வெட்டி, அவனுக்கு ஊட்டிவிட்டு கொண்டாடினர். இதுசம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    • சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.
    • சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் உலகப் பிரசித்தி பெற்ற மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது ஒலியுல்லா அடக்கமாகி உள்ளார். இந்த தர்காவில் வருடந்தோறும் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த வருடம் 849-ம் ஆண்டு உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி மகரீபு தொழுகைக்கு பின் மவ்லீது (புகழ் மாலை) ஓதப்பட்டு நேற்று தொடங்கியது. இதை யொட்டி தர்கா அக்தார்கள் முன்னிலையில் ராமநாத புரம் மாவட்ட டவுன் ஹாஜியார் சலாஹூதீன் ஆலிம் தலைமையில் புகழ்மாலை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தொடர்ந்து தர்கா மண்டபத்தில் இருந்து ஹக்தார்களால் மவ்லீது ஷரீப் எனும் புகழ்மாலை 23 நாட்களுக்கு ஓதப்படுகி றது. அதனை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி 13-ந் தேதி அதிகாலை வரை நடக்கிறது. மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுக்க, நாட்டியக் குதிரைகள் நடன மாட, சந்தனக்கூடு பவனி வருகிறது. அனைத்து சமுதாயத்தினரின் அணி வகுப்புடன் புனித மக்பரா வில் சந்தனம் பூசப்படும்.

    19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியாக அஸர் தொழுகைக்குப்பின் கொடி யிறக்கம் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய்ச்சோறு விநியோகிக்கப்பட்டு 849-வது உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர். யாத்ரீகர்க ளுக்கான சுகாதார பணி களை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் செய்து வருகிறார்.

    • ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 27-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது.
    • 29-ந்தேதி கோவிலில் ராமலிங்க பிரஷ்டை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும். அதுபோல் இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ஆண்டுதோறும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தல வரலாற்றை விளக்கும் வகையில் ராமலிங்கம் பிரதிஷ்டை திருவிழா மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அது போல் ராமேசுவரம் கோவில் உருவாக காரணமான மிக முக்கிய திருவிழாவான ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கோவில் உருவான காலத்தில் இருந்து 10 நா29-ந்தேதி அன்று கோவிலில் ராமலிங்க பிரஷ்டை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.ட்கள் திருவிழாவாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளாகவே ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தல வரலாற்றை விளக்கக்கூடிய திருவிழாவானது 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றது. அதில் முதல் நாள் ராவண சம்ஹாரமும், இரண்டாவது நாள் விபிஷ்ணர் பட்டாபிஷேகமும், 3-வது நாள் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது.

    இந்த நிலையில் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகின்ற 27-ந் தேதி அன்று தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 27-ந்தேதி அன்று மாலை 5 மணி அளவில் திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே ராமபிரான் பத்துதலை கொண்ட ராவணனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    விழாவில் 2-வது நாளான 28-ந் தேதி அன்று கோதண்டராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபிஷணர் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மூன்றாவது நாளான வருகின்ற

    உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மாதத்திற்கு உண்டியல் வருமானம், தீர்த்தம், தரிசனம் தங்கும் விடுதி என பல வழிகளிலும் பக்தர்கள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை கொடுக்கும் இந்த கோவிலில் தல வரலாற்றை விளக்கக்கூடிய ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவையோ மீண்டும் வழக்கம்போல் 10 நாட்கள் வருகின்ற ஆண்டில் இருந்தாவது நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுபோல் ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கோவிலின் தல வரலாற்றை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமபிரான் பூஜை செய்வது போன்று அருகில் ஆஞ்சநேயர் மற்றும் முனிவர்கள் உள்ளிட்டோர் நிற்பது போன்று ராமலிங்க பிரதிஷ்டை சிற்பக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிற்பக்கூடத்தில் உள்ள அனைத்து சிலைகளும் மிகவும் சேதமடைந்தும் வர்ணங்கள் உதிர்ந்தும் பொலிவிழந்தும் காட்சி அளித்து வருகின்றது.

    இந்த ராமலிங்க பிரதிஷ்டை சிற்ப கூடத்தில் உள்ள சிலைகளை சீரமைத்து புனரமைத்து வர்ணம் அடிப்பதற்கோ கோவில் நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ராமலிங்கபிரதிஷ்டை சிற்பக்கூடத்தை மிகுந்த மனவேதனையுடன் பார்த்து செல்கின்றனர். ஆகவே சிற்ப கூடத்தில் உள்ள சிலைகளையும் சீரமைத்து வர்ணங்கள் பூசி புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதா மகளிரணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் பலியானார் கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பா.ஜனதா மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமிதேவி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வை யாளர் முரளிதரன் அனை வரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் சண்முகராஜா,பவர் நாகேந்திரன்,கலாராணி, கவுன்சிலர்கள் குமார், முருகன், மண்டல தலை வர்கள் வீரபாகு, ஜோதிமுரு கன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ×