என் மலர்
நீங்கள் தேடியது "தெரு விளக்குகள்"
- மேலச்செல்வனூரில் தெரு விளக்குகள்-மின் மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஊராட்சி மன்றத்தலைவர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாயல்குடி
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் மகரஜோதி கோபால கிருஷ்ணன். என்ஜினீயரான இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-
மேலச்செல்வனூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து அம்மன் கோவில் வரை ரூ.10 லட்சத்திலும், மேலச்செல்வனூர் யாதவர் தெருவில் ரூ.6.56 லட்சத்தி லும், அங்குள்ள அம்மன் கோவில் பகுதியில் இருந்து பிள்ளையார் கோவில் வரை ரூ.4 லட்சத்திலும், மேலச்செல்வனூர் மருது பாண்டியர்நகர் பகுதியில் ரூ.2.70 லட்சத்திலும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்க ப்பட்டுள்ளது. மேலச்செல்வ னூர் யாதவர் தெருவில் 100 மீட்டரும், ஆதி திராவிடர் காலனி பகுதியில் 100 மீட்டரும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலச்செல்வனூர் பொது ஊரணியில் ரூ.4 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. ஊருணியில் படித்துறை ரூ.50 ஆயிரத்தில் பழுது பார்க்கப்பட்டுள்ளது. மேலச்செல்வனூர் கிராமத்தில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
பொது மயானத்தில் ரூ 17 லட்சத்தில் சுற்றுச்சுவர், எரிமேடை, காத்திருப்போர் கூடம், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேல செல்வனூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம், கண்ணன் கோவில், ஆதி திராவிடர் தெரு, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனித்தனியாக பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலச்செல்வனூர் கிராமத்திலும், எம். எஸ். புது குடியிருப்புக்கும் தலா ரூ.8 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. எஸ் ஆலங்குளம் கிராமத்தில் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. தேரங்குளம் கிராமத்தில் திறந்தவெளி கிணறு ரூ. 12 லட்சத்தில் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாப்பாக்குளம் கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தில் மேலச்செல்வனூர் கிராமத்தில் 331 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. என.பாடு வனேந்தல் கிராமத்தில் 100 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கடையக்குளம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் மற்றும் பைப் லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேரங்குளம் கிராமத்தில் குடிநீர் கிணற்றிலிருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலச்செல்வனூர் அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் அறை கட்டிடம் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் பணி கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் மேலச்செல்வனூர் ஊராட்சிக்கு நீதி ஒதுக்கி கீழ்க்கண்ட பணிகள் நடைபெற உதவ வேண்டும்.
மேலச்செல்வனூர் கிராமத்தில் இருந்து மடத்தாகுளம் கிராமத்திற்கு புதிய சாலை அமைக்க வேண்டும். 2007-2008-ம் ஆண்டில் மேலச்செல்வனூர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி கட்டிடம் இல்லாததால் அங்குள்ள தொடக் கப்பள்ளி கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க மேலச்செல்வனூர் கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். எம்.எஸ்.புதுக்குடியிருப்பு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, தேரங்குளம் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க தொட்டி, பாப்பாகுளம் கிராமத்தில் 30 ஆயிரம் நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
பறவைகள் சரணாலயம் உள்ள மேலச்செல்வனூர் சுற்றுலா தலமாக உள்ளதால் அத்துறை சார்பில் இங்கு கழிப்பறை, ஓய்வு அறை, உணவு அருந்தும் கூடம் கட்டித்தர வேண்டும். மேலும் வருவாய் ஆய்வாளர் கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலச்செல்வ னூர் ஊராட்சி முழுவதும் தெரு விளக்குகள் விஸ்தரிப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலச்செல்வனூர் மற்றும் எம்.எஸ்.புதுக்குடி யிருப்பு கிராமத்தில் திறந்த வெளி கிணறு அமைக்க வேண்டும். மேலச் செல்வனூர் கிராமத்தி ற்கு 2 மின்மாற்றிகள், எம்.எஸ்.புதுக்குடியிருப்புக்கு ஒரு மின் மாற்றி, கடையக்குளம் கிராம த்திற்கு ஒரு மின்மாற்றி அமைத்து கூடுதல் மின்சாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
மேலச்செல்வனூர் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவதற்கு பொது ஊரணி மற்றும் பறவைகள் சரணாலயம் கண்மாயில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமத்துவபுரத்தில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு குடியிருப்பில் புதிதாக 30 தெரு விளக்குகள் ஒதுக்கபட்டுள்ளது
- நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமுத்துவபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில், காலை உணவு வழங்கும் திட்டத்தை, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அவர், அவர்களுடன் அமர்ந்து கிச்சடி சாப்பிட்டார். அதை தொடர்ந்து நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தினமும் காலையில் வாகனம் மூலம் குப்பைகள் சேகரிப்படுகிறதா என்பது குறித்து அங்கு கேட்டறிந்தார்.
அதன் பின்னர் நமது செய்தியாளரிடம் அவர் கூறும்போது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்டுள்ள 42 பிளாக்களில் 1920 வீடுகள் உள்ள பகுதிக்கு 30 தெரு விளக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தெரு விளக்குகள் விரைவில் பொருத்தப்படும் என்று அவர் கூறினார். அதன் பின்னர் தைலா நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர்கள் மதியழகன், பழனிவேல் உடனிருந்தனர் .
- சென்னையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மண்டலங்களில் ரூ.4 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் விடுபட்ட இடங்களில் 1,104 மின்சேமிப்பு எல்.இ.டி. விளக்குகள்.
- 36 உயர்கோபுர எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மண்டலங்களில் ரூ.4 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் விடுபட்ட இடங்களில் 1,104 மின்சேமிப்பு எல்.இ.டி. விளக்குகள், போலீஸ் சார்பில் பாதுகாப்பு கருதி அறிவுறுத்தப்பட்ட இடங்களில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் 696 எல்.இ.டி. தெருவிளக்குகள் மற்றும் 49 உயர்கோபுர எல்.இ.டி. மின்விளக்குகள், மின்துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பாதுகாப்பு கருதி ரூ.22 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 794 மின்சேமிப்பு எல்.இ.டி. தெருவிளக்குகள் மற்றும் 36 உயர்கோபுர எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் உள்பட ரூ.33 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






