search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Collector"

    • தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக லட்சுமிபதி நேற்று பொறுப்பேற்றார்.
    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டராக லட்சுமிபதி நேற்று பொறுப்பேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தின் ஊரக பகுதிகள், நகரப்பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் முழு அளவிலான வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், ஒட்டுமொத்த நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் மாவட்ட கலெக்டர் என்ற முறையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் குடிநீர், சாலை, பொது சுகாதாரம், திடக்கழிவு திட்டங்கள் போன்ற அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும். மக்கள் குறை தீர்ப்பு முகாமில் விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் விரைந்து தீர்வு காணப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் பொருளாதார தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் திகழ்கிறது. இந்த மாவட்டம் முழு அளவிலான வளர்ச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். நான் முதல்வன் திட்டம், மாணவர்களின் கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாடு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானவேவ் ராவ், சப்-கலெக்டர் கௌரவ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். 

    • ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்.
    • புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு சந்திரன் பேட்டியளித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய மாவட்ட கலெக்டராக விஷ்ணுசந்திரன் பதவி ஏற்றார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொதுவாக பிறந்த இடத்திற்கு மீண்டும் வருவதே ஒரு பெருமையாகும். அந்த அளவிற்கு நான் முதல் முதலாக 2015-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டு முதல் பணியாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய் கோளட்டத்தில் சார்ஆட்சியராக 2 ஆண்டுகள் பணியாற்றினேன்.

    அதனை தொடர்ந்து நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டங்களில் சார் ஆட்சியராகவும், நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையாளராகவும், சென்னையில் நகராட்சி நிர்வாக இணை ஆணைய ராகவும் பணியாற்றி விட்டு முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்றுள்ளேன்.

    அரசின் திட்டங்களை கடைக்கோடிகிராமங்கள் வரைகொண்டு சென்று அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுவேன். குறிப்பாக இதற்குமுன் பணியாற்றிய கலெக்டர்களின் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவது மட்டுமின்றி, மேலும் சிறப்புடன் செயல்படுத்துவேன்.

    அதேபோல் இந்த மாவட்டம் எனக்கு பிறந்த வீடு போல் என்ற பெருமை உண்டு. காரணம், நான் முதல் முறையாக அரசு பணிக்கு பணியாற்றியது இந்த மாவட்டத்தில் தான். தற்பொழுது மீண்டும் இதே மாவட்டத்திற்கு கலெக்டராக வந்திருப்பது தாய் வீட்டுக்கு வந்ததுபோல் உள்ளது.

    இந்த மாவட்டத்தை பொறுத்த வரை மக்களின் தேவை என்ன என்பதை அறிவேன். முதல்- அமைச்சரை சந்தித்த போது அவர் பொதுமக்கள் நலன் கருதி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் திட்டங்களை செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவேன்.

    கலெக்டர் என்ற முறையில் அனைத்து துறைகளுக்கும் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவதுடன், பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வேன். நாள்தோறும் என்னை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கும் பொது மக்களுக்கு உரிய தீர்வு கிடைத்திட செயல்படுவேன். என்னை பொறுத்தவரை பொதுமக்கள் நேரடியாக சந்திக்க எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். தொலை பேசியிலும் கோரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதிலும் செயல்பட்டு மக்களின் வளர்ச்சிக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ப செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்ட 16-வது புதிய கலெக்டராக டாக்டர் எஸ்.உமா, பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள், தன்னார்வ, தொண்டு நிறுவனத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட 16-வது புதிய கலெக்டராக டாக்டர் எஸ்.உமா, பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள், தன்னார்வ, தொண்டு நிறுவனத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    பெண்கள் நலமே குடும்ப நலம் என்பதால் ஆரோக்கியமான குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தும் சுகாதாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்த ப்படும்.

    மலைவாழ் பகுதியில் தலசீமியா போன்ற மரபணு சார்ந்த பிரச்னைகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். தாய்-சேய் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒத்துழைப்போடும் சுகாதாரத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

    மேலும் அனைத்து மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு முன்னோடி மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள உமா, எம்.பி.பி.எஸ் எம்.டி படித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், 1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அதிகாரியாகவும், 2005 முதல் 2015-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை துணை இயக்குனராகவும், 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை இணை இயக்குனராகவும், 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பழனி சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.

    2020 ஏப்ரல் முதல் 2021 வரை ராணிப்பேட்டையில் கூடுதல் கலெக்டராகவும், மே 2021-ல் இருந்து தற்போது வரை தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் எம்.ஜி.ஆர் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபியில் தங்க பதக்கம், தமிழ்நாடு அரசின் சிறந்த டாக்டருக்கான விருது, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கான விருது உட்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்றார்.
    • அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.

    சிவகங்கை

    தமிழக அரசு அண்மையில் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

    சிவகங்கை கலெக்டராக இருந்த மதுசூதன்ரெட்டி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆஷாஅஜித் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலக அறையில் சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்று கொண்டார்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரேயாசிங் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து சென்னையில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் உமா இடமாற்றம் செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்டர் எஸ்.உமா, தற்போது தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டத்தின், திட்ட இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    அவர் ஒரு சுகாதார அதிகாரியாகத் தொடங்கி, சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

    தமிழ்நாடு அரசு அவருக்கு 2019-ம் ஆண்டு இந்திய நிர்வாகப் பணிகள் (ஐ.ஏ.எஸ்) கேடருக்குப் பதவி உயர்வு அளித்தது.

    • புதிதாக பொறுப்பேற்ற திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி
    • அனைத்து துறை அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா சென்னை தலைமைச் செயலகத்திற்கு சமூக நல துணைச் செயலாளர் மாற்றப்பட்டார்.

    திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பின்ன செய்தியாளர்க ளிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கடைக்கோடி மக்களுக்கு சென்று அடைய மாவட்ட நிர்வாகம் பாடுபடும்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகளும் மாவட்டத்தை முதன்மை யாக மாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது குறைகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக வந்து தெரிவிக்கலாம்.

    அதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வாசல் கதவு அனைத்து நேரம் திறந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

    முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

    • சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்து மாறுதலாகி வந்துள்ளார்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டராக வளர்மதி நேந்று பொறுப்பேற்றார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டராக வளர்மதி நியமிக்கப்பட்டார்.அவர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

    அவரிடம் திருப்பத்தூருக்கு மாறுதலாகி செல்லும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து வழங்கினார்.

    புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வளர்மதி சென்னை மாவட்டத்தில் பிறந்தவர்.2003-ம் ஆண்டு துணை கலெக்டராக வேலூரில் பயிற்சியில் சேர்ந்தார்.2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சென்னை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார்.

    பின்னர் 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை திருவண்ணா மலை மாவட்ட வருவாய் கோட்டாட்சி யராகவும், 2007-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தர்மபுரி கோட்டாட்சி யராகவும், 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சிறப்பு அலுவலராக பணிபுரிந்தார்.

    2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனராகவும் பணிபுரிந்து 2016-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு பெற்றார்.

    2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணை செயலாளராகவும், 2021-ம் ஆண்டு முதல் இணைச்செயலாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்து மாறுதலாகி வந்துள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தின் 218-வது கலெக்டராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார்.
    • பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    பொறுப்பேற்பு

    இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் நெல்லை மாவட்டத்தின் 218-வது கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து இன்று காலை அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாசில்தார்கள் ஆனந்த பிரகாஷ், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

    அரசு திட்டங்களுக்கு முன்னுரிமை

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரலாற்று சிறப்புமிக்க நெல்லையின் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்டதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்கள் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது மக்களினுடைய கோரிக்கைகள், கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இந்த மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    நடவடிக்கை

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளும் சிறப்பாக நடத்தப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்க வரும் பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய கலெக்டர் ஆகாஷ் கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை 2½ ஆண்டுகள் சேரன்மகாதேவி சப்-கலெக்டராக பணியாற்றியவர்.
    • இவர் தென்காசி மாவட்டத்தின் 4-வது கலெக்டர் ஆவார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டராக இருந்த கோபால சுந்தரராஜ் சென்னை வணிக வரித்துறை இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து பெருநகர சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

    அவர் இன்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏற்கனவே கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை 2½ ஆண்டுகள் சேரன்மகாதேவி சப்-கலெக்டராக பணியாற்றி உள்ளேன்.

    அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது சேரன்மகாதேவி சார்- ஆட்சியர் எல்கைக்குள் கடையம் பகுதிகள் இடம் பெற்றிருந்தது.

    எனவே இந்த பகுதிகளை பற்றி எனக்கு தெரியும். மேலும் இங்குள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் அறிவேன். இங்கு பணியாற்றிய அனுபவத்தை வைத்து சிறப்பாக பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கிறேன்.

    சேரன்மகாதேவிக்கு பிறகு சென்னையில் 3 ஆண்டுகள் பணி புரிந்தேன். வட்டார துணை ஆணையாளராக 2 ஆண்டுகளும், பெருநகர சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக 1 ஆண்டும் பணி புரிந்துள்ளேன்.

    இந்த அனுபவங்களை வைத்து சிறப்பான முறையில் பணியாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவர் தென்காசி மாவட்டத்தின் 4-வது கலெக்டர் ஆவார்.

    ×