என் மலர்
நீங்கள் தேடியது "Karthikeyan"
- நெல்லை மாவட்டத்தின் 218-வது கலெக்டராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார்.
- பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பொறுப்பேற்பு
இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் நெல்லை மாவட்டத்தின் 218-வது கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாசில்தார்கள் ஆனந்த பிரகாஷ், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அரசு திட்டங்களுக்கு முன்னுரிமை
அதனைத் தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க நெல்லையின் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்டதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்கள் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது மக்களினுடைய கோரிக்கைகள், கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்த மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கை
மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளும் சிறப்பாக நடத்தப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்க வரும் பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சதிஷ் ஜி குமார் இயக்கும் சூரகன் திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
- பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் ஜி.குமார் அடுத்ததாக இயக்க உள்ள படம் "சூரகன்". தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பாக வி.கார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடிக்கிறார். இப்படத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், கே.ஜி.எஸ். வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சூரகன்
சதீஷ் ஜி குமார் ஒளிப்பதிவு இயக்கம் செய்யும் இப்படத்தில் இணைந்து ஜேசன் வில்லயம்ஸ் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து இப்படத்திற்கான படப்பிடிப்பினை துவக்கி வைத்தார். மேலும், இப்படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தற்போது ஓரளவு விசாரணை முடிந்த நிலையில் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்காக ஒவ்வொரு வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதான் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடமும் வக்கீல் ராஜ்குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

விசாரணை ஆணையத்தில் இவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது குரல் பதிவு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission