என் மலர்

  செய்திகள்

  ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் கார்த்திகேயன், தீபக், பூங்குன்றன் ஆஜர்
  X

  ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் கார்த்திகேயன், தீபக், பூங்குன்றன் ஆஜர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கார்த்திகேயன், தீபக், பூங்குன்றன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
  சென்னை:

  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

  தற்போது ஓரளவு விசாரணை முடிந்த நிலையில் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

  இதற்காக ஒவ்வொரு வருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  ஜெயலலிதான் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

  இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடமும் வக்கீல் ராஜ்குமார் குறுக்கு விசாரணை செய்தார்.

  சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர் ஆனார். அவரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது.  விசாரணை ஆணையத்தில் இவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

  அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது குரல் பதிவு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
  Next Story
  ×