search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivagangai district"

    • மக்கள் நீதிமன்றம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக் குமரன், சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் 13 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 7 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 34 காசோலைகள் வழக்கு களும் என மொத்தம் 54 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 8 வழக்குகள் சமர சமாக தீர்க்கப்பட்டு ரூ.38 லட்சத்து75ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட 405 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 63 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    • சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்றார்.
    • அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.

    சிவகங்கை

    தமிழக அரசு அண்மையில் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

    சிவகங்கை கலெக்டராக இருந்த மதுசூதன்ரெட்டி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆஷாஅஜித் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் புதிய கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலக அறையில் சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஆஷாஅஜித் பொறுப்பேற்று கொண்டார்.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை சிவகங்கை வருகிறார்.
    தேவகோட்டை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (29-ந் தேதி) சிவகங்கை வருகிறார்.

    காளையார்கோவிலில் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவை நடத்தி வைக்கும் தினகரன் பின்னர் பனங்குடி, சொக்கநாதபுரம், செம்பனூர், ஆலங்குடி, மானகிரி ஆகிய பகுதிகளில் நடைபெறும் கொடியேற்று விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து தேவகோட்டையில் வடக்கு ஒன்றியம், முள்ளிக்குண்டு ஆகிய இடங்களில் கட்சிக் கொடி ஏற்றுகிறார். சாத்தான்கோட்டையில் கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்கிறார்.

    இறகுசேரியில் குமார் இல்ல புதுமனை விழாவில் பங்கேற்கும் தினகரன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பையா ஆகியோர் வீடுகளுக்கு செல்கிறார்.

    டி.டி.வி. தினகரன் சிவகங்கை மாவட்டம் வருவதையொட்டி அவருக்கு மேள,தாளங்கள் முழங்க பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமையில் அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், தேவகோட்டை நகரச் செயலாளர் கமலக்கண்ணன், கண்ணன் குடி ஒன்றியம் சரவண மெய்யப்பன் என்ற கார்த்திக், இறகு சேரி குமார், தமிழ்குமரன், கண்ணன், நிலவழகன், செந்தில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை தொகுதியில் பயன்படுத்த புதிய வாக்கு எந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை தொகுதியில் பயன்படுத்த புதிய வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு (2019) இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தற்போது விரைவாக செய்து வருகிறது. இதில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கையின் போது புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 310 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,800 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தேர்தல் பொறுப்பு அலுவலர் கண்ணபிரான், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் மற்றும் பறக்கம் படை தாசில்தார் பாலகுரு ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் அதிகாரிகள் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்தனர். வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    ×