search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்
    X

    நாமக்கல் மாவட்ட கலெக்டராக டாக்டர் எஸ்.உமா பொறுப்பேற்றுக் கொண்ட காட்சி.

    நாமக்கல் மாவட்டத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்

    • நாமக்கல் மாவட்ட 16-வது புதிய கலெக்டராக டாக்டர் எஸ்.உமா, பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள், தன்னார்வ, தொண்டு நிறுவனத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட 16-வது புதிய கலெக்டராக டாக்டர் எஸ்.உமா, பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள், தன்னார்வ, தொண்டு நிறுவனத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    பெண்கள் நலமே குடும்ப நலம் என்பதால் ஆரோக்கியமான குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தும் சுகாதாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்த ப்படும்.

    மலைவாழ் பகுதியில் தலசீமியா போன்ற மரபணு சார்ந்த பிரச்னைகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். தாய்-சேய் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒத்துழைப்போடும் சுகாதாரத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

    மேலும் அனைத்து மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு முன்னோடி மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள உமா, எம்.பி.பி.எஸ் எம்.டி படித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், 1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அதிகாரியாகவும், 2005 முதல் 2015-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை துணை இயக்குனராகவும், 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை இணை இயக்குனராகவும், 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பழனி சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.

    2020 ஏப்ரல் முதல் 2021 வரை ராணிப்பேட்டையில் கூடுதல் கலெக்டராகவும், மே 2021-ல் இருந்து தற்போது வரை தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் எம்.ஜி.ஆர் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபியில் தங்க பதக்கம், தமிழ்நாடு அரசின் சிறந்த டாக்டருக்கான விருது, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கான விருது உட்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×