search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் வளர்மதி பொறுப்பேற்பு
    X

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் வளர்மதி பொறுப்பேற்பு

    • சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்து மாறுதலாகி வந்துள்ளார்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டராக வளர்மதி நேந்று பொறுப்பேற்றார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டராக வளர்மதி நியமிக்கப்பட்டார்.அவர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

    அவரிடம் திருப்பத்தூருக்கு மாறுதலாகி செல்லும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து வழங்கினார்.

    புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள வளர்மதி சென்னை மாவட்டத்தில் பிறந்தவர்.2003-ம் ஆண்டு துணை கலெக்டராக வேலூரில் பயிற்சியில் சேர்ந்தார்.2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சென்னை தலைமையிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார்.

    பின்னர் 2006-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை திருவண்ணா மலை மாவட்ட வருவாய் கோட்டாட்சி யராகவும், 2007-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை தர்மபுரி கோட்டாட்சி யராகவும், 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சிறப்பு அலுவலராக பணிபுரிந்தார்.

    2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனராகவும் பணிபுரிந்து 2016-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு பெற்றார்.

    2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணை செயலாளராகவும், 2021-ம் ஆண்டு முதல் இணைச்செயலாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்து மாறுதலாகி வந்துள்ளார்.

    Next Story
    ×