பொதுமக்களின் குறைகளை கேட்க எந்த நேரமும் கலெக்டர் அலுவலகம் திறந்திருக்கும்

புதிதாக பொறுப்பேற்ற திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேட்டி அனைத்து துறை அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்
திருப்பத்தூரில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.
திருப்பத்தூரில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா சென்னை தலைமைச் செயலகத்திற்கு சமூக நல துணைச் செயலாளர் மாற்றப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்ன செய்தியாளர்க ளிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கடைக்கோடி மக்களுக்கு சென்று அடைய மாவட்ட நிர்வாகம் பாடுபடும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள அதிகாரிகளும் மாவட்டத்தை முதன்மை யாக மாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது குறைகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக வந்து தெரிவிக்கலாம்.

அதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வாசல் கதவு அனைத்து நேரம் திறந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com