என் மலர்
ராமநாதபுரம்
- விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
- போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 8 கிலோ மீட்டர் தூரமும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 8 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டிக்கு தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பழையக் கோட்டை வரையும், 3 கிலோ மீட்டர் போட்டிக்கு காடாங்குடி வரையும், தொண்டி-மதுரை சாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.
தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவகர் அலிகான், வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு, மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான காத்தராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறுவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் நடந்தது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- திருவாடானை யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- உரிய காலத்திற்குள் முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாடனை யூனியன் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் கிராம சாலை சீரமைக்கும் திட்டத்தில் ரூ.7.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்டு சாலையின் இருபுறமும் மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பக்கவாட்டு பகுதிகள் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதே பகுதியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளி ரூ.1.70லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பணிகளை மேற்கொள்வதுடன் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லும் வகையில் பணியை உரிய முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.14.23லட்சம் மதிப்பீட்டில் ஊரணி சீரமைத்து கரைகள் பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அரும்பூர் மற்றும் பாண்டுகுடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.57.55 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏதுவாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதே பகுதியில் ரூ.9.85லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளிர்மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.24 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அதிகளவு கிராம பகுதிகளில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், பொறியாளர்கள் பாலகுமார், திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
- அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அங்கு உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதன் காரணமாக அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பலர், அங்கிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தார்கள்.பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் அருகே கோதண்டராம கோவில் பகுதியில் 3 அகதிகள் வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் இன்று தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு இலங்கையை சேர்ந்த 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் இலங்கை யாழ்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் என்கிற விஜயன் (வயது46), அவரது மனைவி ராஜினி (45), மகள் திபேந்தினி (18) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரித்ததில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையில் இருந்து வந்ததாகவும், அங்கிருந்து கள்ளப்படகு மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் 3 பேரையும் படகில் அழைத்து வந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராம கோவில் கடலோர பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை அங்கு அவர்கள் தவித்தப்படி நின்றிருக்கிறார்கள். மீனவர்கள் கொடுத்த தகவலையடுத்து, அவர்கள் 3 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சாயல்குடி அருகே மறவர் கரிசல்குளத்தில் வில்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மறவர் கரிசல்குளம் கிராமத்தில் வில்வநாதர், விநாயகர், அரியநாச்சி அம்மன், சுப்பிரமணியர், தவசி தம்பிரான், தவமுனி மற்றும் பரிவார தெய்வங்கள் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் வில்வநாதர் சுவாமி.
இதையொட்டி கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு மதுரை ஆதீனம் சுந்தர மூர்த்தி ஞானசம்பந்த தேசிகர் சுவாமிகள், கோவை காமாட்சி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேசுவர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிந்தலக்கரை காலிபராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கடந்த 3 தினங்களாக சுவாமிக்கு விக்னேசுவர பூஜை, புண்ணியாக வசானம், மகா சங்கல்பம், மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கணபதி வழிபாடு, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம், முதல், 2-ம் கால, 3-ம் கால பூஜைகள், எந்திர பிரதிஷ்டை, விக்ரகப் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், 4-ம் கால யாகம், கஜ, கோ, தன, சர்ப பூஜைகள் நடந்தன.
இறுதி நாளான நேற்று கடம் புறப்பாடு நடந்து கோபுர கலசம், மூலஸ்தானம் மற்றும் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 4 நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- அகமுடையார் சங்க துணைத்தலைவர் இல்ல திருமண விழா நடந்தது.
- நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார் நடத்தி வைத்தார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த தமிழக தலைமை அகமுடையார் சங்க மாநில துணைத் தலைவர் நாராயண மூர்த்தி-மகேஷ்வரி ஆகியோர் மகன் தாமு என்ற தாமோதர முத்துவுக்கும், மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த ராதாகிருஷ்ணன்-மல்லிகா தேவி தம்பதியின் மகள் அஸ்விந்ரா தேவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டி ருந்தது. இவர்களது திருமணம் நேற்று கமுதியில் உள்ள நடராஜன் வேலம்மாள் மகாலில் நடந்தது.
திருமணத்தை தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவன தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார்-செந்தாமரை ஆகியோர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினர். விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம், மதுரை சரவணா ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர்.சரவணன், கரந்தை அ.தி.மு.க. செயலாளர் அறிவுடை நம்பி, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் மூர்த்தி தேவர், தென்னாட்டு மக்கள் கட்சி தலைவர் கணேச தேவர்.
கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வகாப் சஹாராணி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், திருக்கோவிலூர் முரளி, பா.ஜ.க. பொருளாளர் பிரிவு மாநில செயலாளர் எவரெஸ்ட் கார்த்திக், தர்மர் எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சுந்தர்ராஜன், முதுகுளத்தூர் முருகவேல், மலேசியா பாண்டியன், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட பேரவை செயலாளர் மருதுபாண்டியன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமக்குடி நாகராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் கிருஷ்ணன்.
கமுதி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ், துணை சேர்மன் அய்யனார், அகில இந்திய அகமுடையார் இளைஞர் பேரவை தலைவர் ஜெயமணி, வீரகுல அமர இயக்க தலைவர் முருகன், சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சேங்கைமாறன், தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பாரகு, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் சிவராம சந்திரன், அகமுடை யார் அரண் ஒருங்கிணைப் பாளர் பாலமுருகன், அகில இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுரேந்தி ரன், மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ராமசாமி சேவை, கமுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி, முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர்
- ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர் கள் கலந்து கொண்டு தங்க ளது பகுதியில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றி பேசினர்.
அதில், தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் விநியோ கிப்பதை கண்காணிக்க காமிரா பொருத்த வேண்டும். மேலத்தெருவில் உள்ள தரைமட்டத் தொட்டியை சுற்றி கல்லுக்கால் ஊன்றி வேலி அமைக்க வேண்டும்.
பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் ஸ்பீடு நெட் நிறுவனம் மூலம் பைபர் நெட் வயர் கொண்டு செல்ல கம்பங்கள் நடுவதற்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டியில் உள்ள மணிமுத்தாறு பாலம் அருகில் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் விபத்தை தடுக்க பொது மக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் அருகி லேயே புதிய நடைமேடை அமைக்க வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே அதனை அகற்ற தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கடலாடியில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சாயல்குடி
கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன் வரவேற்றார்.
துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, மேலாளர் பாலதண்டாயுதம், கவுன்சிலர் குமரையா முன்னிலை வகித்தனர்.
கடலாடி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிவறைகள் முறை யாக பராமரிக்கப் படாமல் உள்ளது. அதனை சரி செய்யவும், கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் பிச்சை: ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவிற்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் ராமலட்சுமி: பொதிக்குளம் ஊராட்சி அருணகிரி கொட்டகை, ஆப்பனூர் ஊராட்சி இளையனை கொட்டகையில் பழுதடைந்த சாலைகளுக்கு தார் சாலை அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் வசந்தா கதிரேசன்: மடத்தாகுளம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும். மாரியூர் வடக்கு தெரு பகுதியில் குடிநீர் தேவைக்காக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மாரியூர் வடக்கு தெருவில் நாடக மேடை அமைக்க வேண்டும். மாரியூர் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் நாடக மேடை அமைக்க வேண்டும்.
கீழமுந்தல் கிராமத்தில் மின்வயர்கள் அடிக்கடி அறுந்து விழுகிறது. மின் வாரியம் புதிய மின்கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் முருகலட்சுமி மலைராஜ்: 10-வது வார்டு முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. காவிரி கூட்டு குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் செய்யது ராவியா: மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, காமாட்சி புரம், பனையூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பொதுக் கழிவ றை பராமரிக்கப்பட வில்லை. முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.155.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிழற்குடை மற்றும் அதே பகுதியில் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
புல்லமடை ஊராட்சியில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அழகர்தேவன்கோட்டை ஊராட்சியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டிடம் கட்டும் பணியையும், அதே பகுதியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், தும்பனம்காகோட்டை ஊராட்சியில் ரூ.22.18 லட்சம் மதிப்பீட்டில் மயானம் கட்டிடம் மற்றும் காத்திருப்போர் வளாகம், சுற்று சுவர் அமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதே பகுதியில் ரூ.7.62 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிநடைபெறுவதையும், புல்லமடை ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணியையும், சணவேலி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாளர் கட்டிடம் கட்டும் பணியை யும், கற்காத்தகுடி ஊராட்சி யில் ரூ.28.93 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தும்பனம்காகோட்டை ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை பார்வை யிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கி வரும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் வசதி இல்லை எனவும், கூடுதலாக குடிநீர் வசதி ெசய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதல் இணைப்பு வழங்கும் வரை தற்காலிக மாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, செல்லம்மாள், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பொறியாளர் திலீபன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பொருட்காட்சியை இலவசமாக கண்டு களிக்கலாம் என பொருட்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் முதல்முறையாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி மே 2-ந்தேதி முதல் நடந்து வருகிறது.
கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் இந்த பொருட்காட்சி வருகிற ஜூன் 4-ந்தேதி வரை நடக்கிறது. கண்காட்சி மைதான முகப்பில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது.அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கின்ற னர். துபாயில் உள்ள அரபா லோட்டஸ் ரிப்பன் பில்டிங் புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. இயற்கை அங்காடி, குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, வரிக்குதி ரை,மான்கள், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது.மேலும் இப்பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்,பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கான நீச்சல் குளம்,பொருட்காட்சி திடலை சுற்றி வரும் அப்பளம்,வாழைத்தண்டு சூப்,ஜிகர்தண்டா போன்ற சுவையான தின்பண்டங்கள் கடைகளும் பொருட்காட்சி யில் இடம் பெற்றுள்ளன.
இந்த பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.நுழைவு கட்டணமாக ரூபாய் 50 செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பொருட் காட்சியை கண்டு களிக்க லாம் என பொருட் காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
- விழா நிறைவடைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன் நிறை குளத்துஅய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் மற்றும் முத்துராம லிங்கதேவர் 31-வது குருபூஜை விழா நடை பெற்றது.
விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுக்கோட்டை கிராம ஊரணியின் மைதானத்தின் நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக, மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன.
இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்க மதுரை, விருது நகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன.இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 2 அண்டா, 2 குக்கர், ரூ.5000 ரொக்கம் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.
இந்த வடமாடு மஞ்சு விரட்டு விழா நிறைவ டைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- மானிய திட்ட கடன்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
- எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யேற்று வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசின் மானிய திட்டங்கள் வங்கியின் மூலம் பொது மக்களுக்கு சென்ற டைகின்றன. குறிப்பாக மாவட்ட தொழில் மையம் தாட்கோ, மாற்றுத்திறனாளி நலத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை போன்ற துறைகள் மூலம் பொதுமக்களுக்கான கடன் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்ப டுகிறது. பொதுவாக மானிய கடன் திட்டங்கள் வங்கியின் மூலம் வழங்குவதால் தேர்வு செய்யப்பட்ட துறைகள் பயனாளிகளுக்கான மானிய தொகையினை விடுவிக்க பரிந்துரை செய்யப்படும். இதன் மூலம் கடன் பெறும் பயனாளிகள் கடன்களை திரும்பி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.வங்கிகளை பொறுத்த வரை பெறக்கூடிய மனுக்க ளை உடனுக்குடன் பரிசீ லனை செய்து பயனாளி களுக்கான கடன் தொகை யினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக தொழில் தொடங்க ஆர்வமுடன் வருபவர்களுக்கு நாம்உறுதுணையாக இருந்தால் தான் அவர்களின் முயற்சி மேலும் அதிகரிக்கும். எனவே வங்கி மேலாளர்கள் அரசு மானிய கடன் திட்டங்களுக்கான பெறக்கூடிய மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, நபார்டு வங்கி மேலாளர் அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கமுதி அருகே நடந்த கபடி போட்டியில் 43 அணிகள் பங்கேற்றனர்.
- சாமிபட்டி அணி முதல் பரிசை பெற்றது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்த கோட்டை கிராமத்தில், ஆண்டுதோறும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கபடி போட்டி நடத்தப்படும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த ஆண்டு 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், லக்கி கார்னர் உள்பட பல போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரியவர்கள், சிறியவர்கள்,பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு பணியில் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுத்தொகை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
எஸ்.ஆர்.எம். கபடி குழுவினர் நடத்திய கபடி போட்டியில் சேர்ந்த கோட்டை, சாமிபட்டி, ஆலங்குளம், கலையூர், ஏனாதி ஆகிய கிராமங்கள் உட்பட ஏராளமான பகுதியிலிருந்து 43 கபடி அணிகள் பங்கேற்றன. போட்டியில் சாமிபட்டி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.
இந்த அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த சேர்ந்த கோட்டை எஸ்.ஆர்.எம். "பி" அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்க பரிசும், 3-ம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எம். "ஏ" அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், 4-ம் இடம் பிடித்த ஆலங்குளம் அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் செய்திருந்தனர்.






