search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்
    X

    புல்லமடை கிராமத்தில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசர்மா உள்ளார்.

    ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்

    • ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.155.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிழற்குடை மற்றும் அதே பகுதியில் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

    புல்லமடை ஊராட்சியில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    அழகர்தேவன்கோட்டை ஊராட்சியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டிடம் கட்டும் பணியையும், அதே பகுதியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், தும்பனம்காகோட்டை ஊராட்சியில் ரூ.22.18 லட்சம் மதிப்பீட்டில் மயானம் கட்டிடம் மற்றும் காத்திருப்போர் வளாகம், சுற்று சுவர் அமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அதே பகுதியில் ரூ.7.62 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிநடைபெறுவதையும், புல்லமடை ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணியையும், சணவேலி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாளர் கட்டிடம் கட்டும் பணியை யும், கற்காத்தகுடி ஊராட்சி யில் ரூ.28.93 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தும்பனம்காகோட்டை ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை பார்வை யிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கி வரும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் வசதி இல்லை எனவும், கூடுதலாக குடிநீர் வசதி ெசய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதல் இணைப்பு வழங்கும் வரை தற்காலிக மாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, செல்லம்மாள், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பொறியாளர் திலீபன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×