என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • தீ தடுப்பு கருவிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம். கமுதி வட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு உயர்நிலை மேல்நிலைபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

    பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வசதிகள் பள்ளிகளில் உள்ளதா? என்பதை ஆண்டு தோறும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    அபிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளிலும் சில தனியார் பள்ளிகளிலும் தீ தடுப்பு கருவிகள் மற்றும் முதலுதவி உபகரணங்கள் இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    சில பள்ளிகளில் காலாவ தியான தீ தடுப்பு சிலிண்டர்கள் உள்ளன. இதனால் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இங்கு முடங்கியுள்ள பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை விடுமுறை நாட்களில் பூர்த்தி செய்ய கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆதி ரத்தினேசுவரர் கோவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது.
    • 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் உள்ள ராமநாதபுர சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேக வல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரத்தினேசுவரர் கோவில் பாண்டி 14-சிவதலங்களில் 8-வது தலமாக கருதப்படுகிறது.

    வருண பகவானின் மகன் வாருணி என்பவர் துர்வாச முனிவரால் சாபத்துக்கு ள்ளாகி யானையின் உடலும் ஆட்டின் தலையும் பெற்று, இங்கு இறைவனை பூஜித்த பின் அந்த சாபம் விலகிய தால் ஆடானை என திரு சேர்ந்து திருவாடானை என பெயர் பெற்றது.

    பாடல் பெற்ற தலமான இந்த ஊருக்கு பாரிஜாத வனம், வன்னி வனம், குருக்கத்தி வனம், வில்வ வனம், முக்திபுரம், ஆதிரத்தினேசுவரம், ஆடானை, மார்க்கண்டேய புரம், அகத்தீஸ்வரம், பதுமபுரம், கோமத்தீஸ்வரம், விஜயேச்சுரம் என 12 பெயர்கள் உள்ளது.

    இங்கு வைகாசி விசாகத் திருவிழா கடந்த வைகாசி 10-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ந் திருவிழாவான இன்று ராமநாதபுர மன்னரின் மண்டப் படியாக வெள்ளி ரிஷப வாகனமும், திருஞான சம்பந்தரின் திருமுலைப் பால் உற்சவமும் தபசு மண்டபத்தில் நடைபெறு கிறது.

    இதையொட்டி இன்று விநாயகர் எலி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதிஉலா வந்தனர். வைகாசி 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    • கமுதி சுந்தரபுரம் ஊரணி பகுதியில் நவாஸ்கனி எம்.பி. சலவை தொட்டிகள் நிதி வழங்கினார்.
    • ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார்.

    பசும்பொன்

    கமுதி-சுந்தரபுரம் பகுதியில், ஏராளமான சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வண்ணாந்துறையில் சலவைத்தொட்டி வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சலவைத் தொட்டிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி சலவைத்தொட்டி கட்டிமுடிக்கப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் தொடக்க விழாவில் நவாஸ்கனி எம்.பி., கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சகாராணி, கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், சுந்தரபுரம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி கிராமத்தில் நவாஸ்கனி எம்பி தனது நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் மற்றும் கிராம பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • ரேசன் கடை ஊழியர்கள் 14-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
    • 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட தலைவருமான தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டலங் களாக வழங்க வேண்டும், 60 வயது வரை பணி செய்து விட்டு பணிநிறைவு பெற்று வீட்டிற்கு செல்லும் போது எந்த பண பலனும் கிடைக் காமல் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    ஓய்வூதியம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒரு பொருளுக்கு இருமுறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

    விற்பனை முனையங்களில் 4ஜி இணைப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்கப் பட்ட பின்னர் காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது.

    இதனை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு வருகிற 9-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்பும் கோரிக்கைகள் ஏற்கப்படா விடில் வருகிற 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்ட நகரிக்காத்தான், நம்புதாளை மற்றும் பாண்டு குடி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புறங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என அறிந்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேன்மை அடைந்திடும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல் படுத்தி வருகிறார்.

    குடிநீர், போக்குவரத்து, மின் விநியோகம், நீர்ப்பாசனம், சாலைவசதி ஆகியவைகள் எந்த தடையுமின்றி மக்களுக்கு கிடைக்க தேவையான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.

    தமிழ்நாடுகுடிநீர்வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நக ராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சிஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    இதன் மூலம் அனைத்துகிராமத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும். இந்ததிட்டத்தின் மூலம் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது தண்ணீர் சீராக கிடைக்கப்பெறாமல் உள்ள பகுதிகளை கண்டறிந்து லாரிகளில் தண்ணீரை கொண்டு சென்று குடிநீர் விநியோகம் செய்ய தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வைத்திடும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், திருவாடானை ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் முகம்மதுமுக்தார், வட்டாரவளர்ச்சிஅலுவலர் ராஜேசுவரி, திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன், உதவிபொறியாளர்கள் செல்வக்குமார், பாலகுமார், வேதவள்ளி, ஜெயந்தி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட இணை செயலாளர் மலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அற்புதராஜ், ஆர்.கே.முனி யசாமி, முத்துக்கூரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முனியசாமி அனைவரையும் வர வேற்றார். பூரண மது விலக்கை வலியுறுத்தியும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை கண்டித்தும், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்ட பலி யான சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகி வசந்தி, ஒன்றிய செயலா ளர்கள் முனியசாமி, சேகர், சுரேஷ், பேரின்பராஜ், விலாசி, பெரியசாமி மற்றும் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாடு நடந்தது.
    • மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சந்தை திடல் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பாராளுமன்ற தொகுதி மாநாடு நடந்தது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும்,தமிழக மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், அழிந்துவரும் விவசாயத் தொழிலை மீட்டெடுக்கவும், பனைத்தொழிலை பாதுகாக்கவும், தொழில்வளத்தை அதிகப்படுத்தக் கோரியும் இந்த மாநாடு நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

    மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்ஜமீல் வரவேற்றார். மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மண்டல சமூக ஊடக அணி பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

    • ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா நடக்கிறது.
    • ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாள ருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 2004-ல் தொகுப்பூதியத்தில் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்பட்ட 53 ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்து ஆசிரியர் பேரவை என்ற சங்கம் உருவாக்கப்பட்டது.அன்றைய தமிழக அரசு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த மறுத்தது.

    இதனால் ஆசிரியர் பேரவை தலைவர் தியாகராஜன் தலைமையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியை சந்தித்தனர். அவரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என உறுதியளித்தார்.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்- அமைச்சரானார்.ஆசிரியர் பேரவைக்கு உறுதியளித்தபடி ஆட்சிக்கு வந்தவுடன் 53 ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.பணி நிரந்தரம் பெற்ற ஆசிரி யர்கள் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தினர்.அந்த விழாவில் கலந்து கொண்ட அன்றைய முதல்-அமைச்சர் ஆசிரியர் பேரவை என்று இருந்த சங்கத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்று பெயரிட்டார்.

    நாளை (29-ந் ேததி) சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட உள்ள ரங்கத்தில் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் மாநிலச்செயலாளர் ரமேஷ் படத்திறப்பு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பள்ளிகளில் படித்து சிறப்பிடத்தை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் பணியையும், இயக்கப்பணியையும் செய்யும் இயக்க பொறுப்பா ளர்களுக்கு விருது வழங்கும் விழா என்ற அடிப்படையில் இந்த விழா நடக்கிறது.சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இதில் கலந்து கொண்டு 53 ஆயிரம் மாணவர்களுக்கு பேனா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    மேலும் ஆசிரியர்க ளுக்கும், இயக்க நிர்வாகி களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.விழாவில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, அன்பரசன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, கணேசன், தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பாடநூல் கழத் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    • சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 2-ம் நாளான இன்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலையில் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி சன்னதி மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை கள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அதன் பின்னர் விபீஷ்ணர் மற்றும் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆகியோர் வாகனத்தில் புறப்பாடாகி 4 ரத வீதிகள் வழியாக நகர் வலம் வந்தனர்.

    பின்னர் ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள ராமர் கோவிலை சென்ற டைந்தனர்.அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் ராமர் சுவாமியை அழைத்து கொண்டு தனுஷ்கோடி சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலை சென்றடைந்தது. அங்கு பகல் 1 மணிக்கு மேல் விபீஷ்ணருக்கு பட்டா பிஷேகம் நடந்தது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவாமிகள் சென்றதையடுத்து ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை நடைகள் சாத்தப்பட்டது. விபீஷ்ணர் பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அங்கிருந்து சுவாமி புறப்படாகி மாலையில் கோவிலுக்கு வந்தடைந்தவுடன் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது.
    • நாளை தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான இன்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே 10 தலை கொண்ட ராவணனை ராமபிரான் தங்க கேடயத்தில் எழுந்தருளி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    இதை தொடர்ந்து திருவிழாவில் 2-வது நாளான நாளை பகல் 1:30 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து இலங்கை மன்னராக ராவணன் தம்பி விபிஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 3-வது நாளான 29-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறுகின்றது.

    திருவிழாவின் 2-வது நாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு ராமர் மற்றும் விபீஷ்ணர் கோவிலிலிருந்து கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தளுகிறார்கள். இதனால் நாளை கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை கோவில் நடையானது அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்பட்டு 3 மணியிலிருந்து 4 மணி வரையிலும் ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று பின்னர் கால பூஜை நடைபெறுகின்றது

    இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமர் மற்றும் விபிஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்ட பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது. நாளை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலை அமைக்க பூமிபூைஜ நடந்தது.
    • ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரூபி, துணைத் தலைவர் சுலைமான், ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு, தலைமை மருத்துவர் அசோக், வார்டு உறுப்பினர் நாகநாதன், பெரியாள் என்ற முனியசாமி, மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், தி.மு.க. தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார் கவுன்சில் நிதியில் இருந்து ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் வாகன அங்காடி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனா ளிகள் விண்ணப்பிக்கலாம்.

    மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ண ப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்ப டையில் மகளிர் மாற்றுத்தி றனாளி கள், கணவரால் கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில் பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தி டமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும்.

    விதிமுறைகளை மீறி செயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு பயனாளிக்கு வழங்கப்படும்.

    தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×