search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Combined drinking water"

    • அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சிஒன்றியத்திற்கு உட்பட்ட நகரிக்காத்தான், நம்புதாளை மற்றும் பாண்டு குடி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புறங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என அறிந்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேன்மை அடைந்திடும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல் படுத்தி வருகிறார்.

    குடிநீர், போக்குவரத்து, மின் விநியோகம், நீர்ப்பாசனம், சாலைவசதி ஆகியவைகள் எந்த தடையுமின்றி மக்களுக்கு கிடைக்க தேவையான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.

    தமிழ்நாடுகுடிநீர்வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நக ராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சிஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.2819.78 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

    இதன் மூலம் அனைத்துகிராமத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும். இந்ததிட்டத்தின் மூலம் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது தண்ணீர் சீராக கிடைக்கப்பெறாமல் உள்ள பகுதிகளை கண்டறிந்து லாரிகளில் தண்ணீரை கொண்டு சென்று குடிநீர் விநியோகம் செய்ய தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வைத்திடும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், திருவாடானை ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் முகம்மதுமுக்தார், வட்டாரவளர்ச்சிஅலுவலர் ராஜேசுவரி, திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன், உதவிபொறியாளர்கள் செல்வக்குமார், பாலகுமார், வேதவள்ளி, ஜெயந்தி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×