search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ தடுப்பு கருவிகள் அமைக்க வேண்டும்-பெற்றோர்கள் கோரிக்கை
    X

    தீ தடுப்பு கருவிகள் அமைக்க வேண்டும்-பெற்றோர்கள் கோரிக்கை

    • தீ தடுப்பு கருவிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம். கமுதி வட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு உயர்நிலை மேல்நிலைபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

    பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வசதிகள் பள்ளிகளில் உள்ளதா? என்பதை ஆண்டு தோறும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    அபிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளிலும் சில தனியார் பள்ளிகளிலும் தீ தடுப்பு கருவிகள் மற்றும் முதலுதவி உபகரணங்கள் இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    சில பள்ளிகளில் காலாவ தியான தீ தடுப்பு சிலிண்டர்கள் உள்ளன. இதனால் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இங்கு முடங்கியுள்ள பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை விடுமுறை நாட்களில் பூர்த்தி செய்ய கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×