search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New TamilNadu party"

    தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பு அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    நெல்லை அருகே  கல்குவாரி விபத்தில் பலியான 4பேர் குடும்பத்திற்கு தமிழக அரசு  ரூ.1  கோடி நிவாரணம் வழங்கவேண்டும், அனைத்து கல்குவாரிகளிலும் அதிகாரிகள் குழுவினர் களஆய்வு செய்திடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர்   தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பு அருகில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மாவட்டசெயலாளர் வழக்கறிஞர்  கனகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் லிங்கராஜ் , மாநில தொண்டரனி செயலாளர்கள் லெட்சுமண பாண்டியன், அசோக்குமார்,  மாநில மகளிரணி சரஸ்வதி, அசுபதி , மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  கரு.ராஜசேகரன், மாநில இளைஞரணி மாரிமுத்து கிருஷ்ணன், மாவட்ட துணைச்செயலாளர்கள் மருதன்வாழ்வு ரவி, அதிக்குமார் குடும்பர்,  பெருமாள், கடம்பூர் கடற்கரை, ஆழ்வை பொன்அமிர்தம், குருவை சதீஷ்குமார்,  புதூர் சிவசெல்வம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் பேசியதாவது:-

    நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அப்பாவிகள் 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். உயிர் இழந்து பாதிக்கப்பட்டுள்ளவர்க ளின் குடும்பத்தினருக்கு, உரிய நீதி கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஆலோசனையின்பேரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் மற்றும், சாத்தான்குளம் தாலுகா உட்பட பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் அதிகளவில் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் பலகோடி ரூபாய் மதிப்பில் கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவே இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி முறைகேடாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் அனைத்தையும் மூடவேண்டும், அனைத்து கல்குவாரிகளிலும் களஆய்வு செய்திடவேண்டும்.
    விதிமுறைகளை மீறிய கல்குவாரிகளை தடை செய்வதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்தும், உரிய அபராதம் விதித்தும் பாரபட்சமின்றி சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கல்குவாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் கனிம வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திடவேண்டும். இதில் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் எங்களின் போராட்டமும் முடிவில்லாமல் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் செந்தூர்பாண்டியன் (தூத்துக்குடி), கோவில்பட்டி சண்முகநாதன்(மேற்கு), தூத்துக்குடி செந்தூர்பாண்டியன், ஜே.சி.பி.முருகன் ஓட்டப்பிடாரம் மேற்கு, மனோகரன் கிழக்கு, முருகேசன்(வடக்கு), சின்னத்துரை (கருங்குளம்) , விளாத்திகுளம் உமையனன் (கிழக்கு), குளத்தூர் பெருமாள் ( தெற்கு), கவுன்சிலர் கேசவன் ஆழ்வை கிழக்கு, ராஜா மேற்கு, செல்வம் தெற்கு கயத்தாறு ரவி (கிழக்கு), சக்கரவர்த்தி(மேற்கு), பேச்சிமுத்து(மத்தி), தொண்டரணி ஒட்டுடன் பட்டி நடராஜன், கருப்பு சட்டை கருப்பசாமி, ப்ரவீன், கதிரவன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கான  ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கனகராஜ் தலைமையில் மாநகர செயலாளர் ரமேஷ் பாண்டியன், துரைபாண்டியன், மாரிமுத்து பாண்டியன் செய்திருந்தனர்.
    ×