என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளும், கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணி புரியவில்லை.

    இதனால் பல இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு ஆஸ்பத்தி ரிக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. இது தவிர பல ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க போதிய அளவில் மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க வும், ேபாதிய அளவில் மகப்பேறு டாக்டர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.
    • முருகேசன் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சங்க பொறுப்பாளர் களுக்கு பயிற்சி பட்டறை நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் லிங்கதுரை முன்னிலை வகித்தார். பொருளாளர் கனகராஜ் வரவேற்றார். அமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சட்ட ஆலோசகர் நவின் அ.மாரி, செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தலைமை நிலையச் செயலாளர் வழிவிட்ட அய்யனார், மகளிரணி செயலாளர் செல்வராணி ஆகியோர் பொறுப்பாளர் களுக்கு பயிற்சி அளித்தனர்.

    மாவட்ட துணைத்தலைவர்கள் அந்தோணி சவரிமுத்து பூமிநாதன், பைலட், ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் வினோத் கண்ணா, மணிகண்டன், ஹரிகர கிருஷ்ணன், மகளிர் அணி துணை செயலாளர்கள் மனோகரி, சுபா, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜூடு லாசரஸ், மோகன், ஸ்டீபன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், கார்த்திக், சசிக்குமார், வட்டார பொறுப்பாளர்கள் அருட்செல்வன், மோகன், ஹிலால் அகமது, மாதவன், மாணிக்கம், அருமைநாதன், முனியசாமி, இபுராஹிம்சா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் பயன்பாடற்ற நிலங்களை பண்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்வ தற்காக கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்படுத்திடும் வகையில் திட்டம் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் கடந்த ஆண்டு 169 ஊராட்சிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் அமைத்து திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 261 ஊராட்சிகளில் 284 விவசாயிகள் கொண்ட கிளஸ்டர் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 429 ஊராட்சிகளிலும் செயல்ப டுத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

    வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஒருங்கிணைந்து பயன்பாடற்ற விளை நிலங்களை கண்டறிந்து அந்த நிலங்களை சீரமைத்து பண்ணையை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாய பணிகளை மேற்கொள் ளவும், தேவையான இடுபொருட்களை கூட்டுறவுத்துறை வழங்கிடும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் இந்த திட்டம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தங்கள் ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை பக்ரீத் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
    • குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை ஜூன் (29-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரத்தில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா மைதானத்தில் நடை பெறுவது வழக்கம். இந்த முறை சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மைதானம் ஈரமாக இருப்பதால் இங்கு நடைபெற இருந்த தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக நகர் முழுவதும் ஆங்காங்கே அமைந்துள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறும் என்று முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்த வெளி மைதானங்க ளிலும் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. சொந்த ஊர்களில் நடைபெறும் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடவும், வளை குடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    • அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என பீ.கீரந்தை ஊராட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
    • இது வரை பீ.கீரந்தை ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவில்லை

    சாயல்குடி

    கடலாடி ஒன்றியம் பீ.கீரந்தை ஊராட்சி தலைவராக தொடர்ந்து 2-வது முறையும், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு துணை செயலாளராகவும் இருந்து வருபவர் ஆனந்தம்மாள் அற்புதராஜ்.

    தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செய்த திட்டப்பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    பீ.கீரந்தை ஊராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் கிராமத்தில் பீ.கீரந்தை வரை ரூ. 66 லட்சத்தில் மெட்டல் சாலை, பி.உசிலங்குளம் கிராமத்தில் உள்ள தெருக்க ளில் ரூ. 10 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் செலவில் ஊருணி அமைக்கப்பட்டுள்ளது.

    மயானத்தில் ஆழ்குழாய் ரூ.2 லட்சத்தில் அமைக்கப் பட்டுள்ளது. கைபம்பு அமைக்க ரூ.2 லட்சம், பொது கழிப்பறை அமைக்க ரூ.5 லட்சம், பொது மயானத் திற்கு மெட்டல் சாலை ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள் ளது.

    பி.உசிலங்குளம் கிராமத்தில் குடிநீர் ஊரு ணிக்கு மெட்டல் சாலை ரூ.10 லட்சத்திலும், சிறு பாலம் ரூ. 9¼ லட்சத்தி லும் அமைக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் ரூ.2 லட்சத்தில் குடிநீர் பைப் லைன் விஸ்தரிப்பு, ரூ.2 லட்சத்தில் குளியல் தொட்டி, பீ.கீரந்தை ஊராட்சி பூலாங்குளம் கிராமத்தில் குடிநீர் ஊருணியில் ரூ. 1¾ லட்சம் செலவில் படித்துறை மற்றும் ரூ.2 லட்சம் செலவில் கைப்பம்பு அமைக்கப் பட்டுள்ளது.

    பீ.கீரந்தை ஊராட்சி சித்துடையான் கிராமத்தில் ரூ.6 லட்சத்தில் திறந்தவெளி கிணறும், கிராம தெருக்களில் ரூ. 8 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. சித்துடையான் கிராமத்தில் கைப்பந்து மைதானம் அமைக்க ரூ.2 லட்சம் செலவிலும், இளம் காளி யம்மன் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை ரூ. 5¾ லட்சம் செலவிலும், அதே கிராமத்தில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்ய ரூ. 2 லட்சம் செலவிலும் பணிகள் நடைபெற்றுள்ளது.

    புத்தேந்தல் கிராமத்தில் குடிநீர் ஊருணியில் படித்துறை ரூ.1.75 லட்சத்தி லும், ப.கீரந்தை கிராமத்தில் திறந்தவெளி கிணறு ரூ.10 லட்சத்திலும் குடிநீருக்காக பைப்லைன் விஸ்தரிப்பு ரூ.2 லட்சத்திலும், திறந்த வெளி கிணறு பகுதியில் பிளாஸ்டிக் தொட்டி ரூ.6 லட்சத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

    பீ.கீரந்தை ஊராட்சியில் பி.உசிலங்குளம், பீ.கீரந்தை, சித்துடையான், பூலாங்குளம், புத்தேந்தல் ஆகிய கிராமங் களில் அனைத்து வீடுகளுக் கும் தனி நபர் உறிஞ்சி குழி அமைத்து தரப்பட்டுள்ளது. மேலும் பீ.கீரந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பீ.கீரந்தை, பூலாங்குளம், புத்தேந்தல் ஆகிய கிராமங்களில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இது வரை பீ.கீரந்தை ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவில்லை. கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 30-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    • பண்டிகையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கூறிய தாவது:-

    தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாளை (29-ந்தேதி) கொண்டாட உள்ளது. இதையொட்டி 30-ந்தேதியை (வெள்ளிக் கிழமை) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

    வருகிற 1, 2-ந்தேதி வார விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் தமது சொந்த ஊர்களில் பண்டி கையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும் ஒரு சில கல்வி நிறுவனங்களில்

    30-ந்தேதி அன்று தேர்வு களும் நடைபெற உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டி கைக்கு அடுத்த நாளான 30-ந்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • தலைமறைவான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கடந்த 3 நாட்களாக தனது கண வருடன் தங்கியிருந்த பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்க தக்க பெண் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கபட்ட நிலையில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தர்காவில் உள்ள கழிப்ப றையில் பிளேடால் கழுத்து மற்றும் இடது கை மணிக்கட்டில் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிப்பட்டு, மேல் சிகிச்சைக் காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஏர்வாடி தர்கா இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் இறந்த பெண் இருந்த இடத்தின் அருகில் தங்கியி ருந்தார். கோவை காந்தி புரத்தை சேர்ந்த ஜூலி (40) என்பவரிடம் விசாரித்ததில், கடந்த 25-ந் தேதி மாலை 3 மணிக்கு இறந்த நபர் பெரிய தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அங்கிருந்த வர்கள் தடுத்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலை யில் தலைமறைவான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • முதன்முறையாக காணிக்கர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்முறையாக காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் பழங்குடியினர் பிரிவில் காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து பரமக்குடி சார் ஆட்சியில் அலுவலகத்தில் 17 நபர்களுக்கு காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ, முருகேசன் காணிக்கர் சாதி சான்றிதழை வழங்கினார். இதில் பரமக்குடி உதவி ஆட்சியாளர் அப்தாப் ரசூல், பரமக்குடி தாசில்தார் ரவி, கமுதி தாசில்தார் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    தொண்டி

    தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணத்தில் குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. இதற்கான பிரசார வாகனத்தை திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசாரமானது மாவட்ட எல்லையான எஸ்.பி.பட்டிணத்தில் தொடங்கி காரங்காடு வரையிலான 14 பஞ்சாயத்திலுள்ள 64 கிராமங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் டி.சி.பி.யூ சமூகப்பணியாளர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மதுக்கடை உள்ளது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்கா செல்லும் வழியில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மதுக்கடை உள்ளது. இங்கு ஏராளமான மதுப்பிரியர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் மாணவிகள், பணிமுடிந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி அருகே உள்ள மதுக் கடையால் பொதுமக்களுக்கு தொந்தரவு அதிகரித்து வருகிறது. பெண்கள், மாணவர்கள் அந்த சாலையில் தயக்கத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. மேலும் அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

    ஆகவே அந்த மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துவிட்டோம். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கும்பாபிஷேக விழாவில் பக்தர்களோடு பக்தர்களாக நின்று திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    • கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை திருடி சென்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெருமாள் கோவில் மற்றும் ஈஸ்வரன் கோவில் இருக்கிறது. இந்த இரு கோவில்களிலும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கும்பாபிஷேக விழா நடந்தது.

    கடந்த 10 நாட்களாக விழா நடந்து வந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 27 பவுன் தங்க நகைகளை திருடர்கள் நைசாக திருடி சென்றுள்ளனர்.

    பரமக்குடி சவுகார் தெருவை சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மனைவி கஸ்தூரி(வயது74) என்பவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க செயின் மற்றும் மீனாட்சி நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மனைவி பூங்கொடி அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை மர்மநபர்கள் திருடி உள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவில் பக்தர்களோடு பக்தர்களாக நின்று திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்து கஸ்தூரி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரும் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை திருடி சென்றவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் எங்கும் சி.டி.சி.டி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அதில் பெண்களிடம் நகைகளை திருடிய திருடர்களின் முகம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்களிடம் திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கும்பரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரக் கோரி மேலாண்மைக்குழுவினா் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திரா, துணை தலைவர் தீபா ஆகியோர் முன்னிலையில் மாண வர்களின் பெற்றோர் ராமநாதபுரத்தில் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம், கும்பரம் அரசு உயர்நிலை பள்ளியில் 180 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போ தைய அரசு, மாண வர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள், சலுகைகளால் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்து தற்போது 400 மாணவர் படித்து வருகின்றனர்.

    கடந்த 2010-ம் ஆண்டில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கட்டப்பட்ட 4 வகுப்பறை கட்டிடங்களே இன்னும் உள்ளது.

    மேலும் இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்கள் நடத்தப்ப டுவதால் தனித்தனியாக கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. இடநெருக்கடியால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மரத்தடியில் பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

    ×