என் மலர்
ராமநாதபுரம்
- மின் இணைப்பு தராததால் காட்சி பொருளான எக்ஸ்ரே கருவியால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
- இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கீழக்கரை
கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது.
இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் செயலாளர் செய்யது இப்ரா ஹிம் கூறுகையில்:-
ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே மிஷினுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய மெஷினில் இணைக்கப்பட்டபோது மின் கசிவு ஏற்பட்டு அனைத்துவயர்களும் எரிந்து விட்டதாக கூறப்படு கிறது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜென ரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத் திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக் கப்படுகிறது.
இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பஸ் நிலையம் விரிவாக்கப்பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியது.
- பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியதால், 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் கூறியதாவது:-
நான் ராமநாதபுரம் மையப்பகுதியில் அமைந் துள்ள புதிய பஸ் நிலையம் கட்டிடங்கள், கடைகள் மற்றும் வளாக பகுதியி லுள்ள சந்தைக்கடை ஆகி யவை சேதமடைந்து காணப் பட்டது. தி.மு.க. அரசு வந்ததும் புதிய பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு அரசானை வெளியிடப்பட்டு, முதற் கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் புதிதாக ஒருங் கிணைந்த பஸ் நிலையம் மற்றும் கடைகள், சந்தை கடைகள், அடிப்படை வசதி கள் அடங்கிய உள்கட்ட மைப்பு வசதிகள் அமைக்கப் பட உள்ளன. இந்நிலையில் சேதமடைந்த பழைய கட்டிடங்கள், 50-க்கும் மேற் பட்ட கடைகள், சந்தைகடை கட்டிடங்கள், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை அகற் றும் பணி உள்ளிட்ட சீர மைப்பு பணிகள் தொடங்கி யுள்ளது. இந்த பணிகள் முழுமை யாக நிறைவடையும் வரை, தற்காலிக பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிரம மின்றி சென்று வர போக்கு வரத்து ஏற்பாடு செய்யும்படி கலெக் டர் விஷ்ணுசந்திரன், காதர்பாட்ஷா எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகி யோரிடம் நகராட்சி நிர்வா கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து நகராட்சி சார்பில் தற்போது ரெயில் வே நிலையம் அருகிலுள்ள பழைய பஸ் நிலையம், மதுரை ரோட்டில் உள்ள மூலக்கொத்தலம் பகுதியி லுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ் கள் வந்து செல்ல மற்றும் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
- டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர். மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் தீர்மானத்தை நிறைவேற்றி னார். துல்கர் நன்றி கூறினார்.
சிறப்பு விருந்தினராக கவிஞர் செஞ்சி சின்னசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அலுவலகம் முன்பிருந்த டாஸ்மாக் கடையை அகற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது, அதற்கு உறுதுணையாக இருந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
மேலும் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகில், முருகன் கோவில் முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்விற்கு கீழக்கரை ஒன்றிய செயலாளர் லோகநாதன் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் ஷரீப், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளி முத்து ஒன்றிய துணைச் செயலா ளர் முனியசாமி, ராமநாத புரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் இளைஞர் சங்கத் தலைவர் முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின் கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்த நிர்வாகிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய சுக்கா மிளகா சமூக நீதி? என்ற புத்தகத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
- ராமநாதசுவாமி கோவில் நிர்வாகத்தை கண்டித்து ராமேசுவரத்தில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்ேவறு கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும், தீர்த்தங்களில் நீராடவும், சிறப்பு சாமி தரிசனம் செய்யவும் அதிக கட்டணம் வசூலிப்படுகிறது.
இைத கண்டித்தும், கோவில் இைண ஆணையர் மாரியப்பனை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் இன்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு அனைத்து கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. மாநில துணை செயலாளர் கராத்தே பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்ேவறு கட்சியினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ மூர்த்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகம் முன்னாள் மாவட்ட சேர்மன் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. தர்மர் எம்.பி., தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை ல் வகித்தனர். நிர்வாகிகள் செல்லமணி, சுந்தரமுர்த்தி , கனேசன், முத்துராமலிங்கம், கால்நடை மருத்துவர் சுந்தர முர்த்தி, தமிழ் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பெங்களுர்-ராமேசுவரம் ெரயில் பரமக்குடி, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
- ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள ஏராளமானோர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.ராமேசுவரம் முதல் ஹூப்ளி வரை இயக்கப்படும் வாராந்திர ெரயில் (ெரயில் எண்.07355) தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக சென்று இறுதியாக ஹூப்ளி ெரயில் நிலையத்தை அடைகிறது.
அவ்வாறு செல்லும் போது பெங்களூரில் உள்ள கார்மேலராம் மற்றும் தமிழ கத்தில் பரமக்குடி, சிவகங்கை ஆகிய ெரயில் நிலை யங்களின் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் அங்கு பணிபுரியும் தென் மாவட்ட பயணிகள் மிருந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஓசூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்வதால் அங்கிருந்து கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள், ெரயில்கள் இல்லாததால் பெங்களூர் பனஸ்வாடி, எஸ்வந்த்பூர் ெரயில் நிலையங்களுக்கு சென்று அதன்பிறகு கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் ெரயில் நிலையங்களுக்கு வர வேண்டி உள்ளது. இதன் காணமாகவும், பயணிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.
பனாஸ்வாடி, எஸ்வந்த் பூர் ெரயில் நிலையங்களில் இருந்து மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் 3 ெரயில் நிலையம் செல்வதற்கு பயணிகள் ெரயில் சரியான நேரத்திற்கு இல்லை.
ஓசூரில் இருந்து காலை 9 மற்றும்9½ மணி அளவில் 16212/06592 வண்டிகள் கார்மேலராம் வழியாக பனாஸ்வாடி, எஸ்வந்த்பூர் செல்கின்றன. ஆனால் ஹூப்ளி வாராந்திர ெரயில் ஓசூர் வரும்போது காலை 9 மணி அளவில் வருவதால் பயணிகள் ெரயிலை ஓசூரில் இறங்கி கன்டோன்மென்ட், கார்மலெராம், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள் பயணிகள் ெரயிலை பிடிக்க முடியவில்லை.
அதேபோல் ஹுப்ளியில் இருந்து ராமேசுவரம் வரும்போது மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் பகுதி மக்கள் வாராந்திர ெரயிலை பிடிக்க எஸ்வந்த்பூர், பனாஸ்வாடி ெரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
சரியான நேரத்திற்கு இந்த ெரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ெரயில் குறித்த நேரத்தில் இல்லை. கார்மேலராம் ெரயில் நிலையத்திலிருந்து காலை 9 மணி அளவில் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்திற்கு சென்று ராமேசுவரம்- ஹூப்ளி வாராந்திர ெரயிலை பிடிக்க 3 மணி நேரம் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்தில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
ஆதலால் மெஜஸ்டிக் மற்றும் கண்டோன்மென்ட், கார்மேலராம் ெரயில் பயணிகளுக்காக ராமேசுவரம்-ஹூப்ளி ெரயிலை கார்மேலராம் ெரயில் நிலையத்தில் நிறுத்தி சென்றால் தமிழ்நாடு மற்றும் பெங்களூர் பயணிகள் பயனடைவார்கள். ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
- சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கடலோர மாவட்டங்களில் சாகா் கவாச் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று (29-ந்தேதி) காலை 6 மணிக்கு தொடங்கி, ஒத்திகை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இதில் கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாா், குற்றப்பிரிவு போலீசாா், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல் துறையை சோ்ந்த பல்வேறு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்தினர். நேற்று நடந்த ஒத்திகையில் ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த 16 பேரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.
பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.
இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டது. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
- குர்பானி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 200க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இன்று காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேலான பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்க ளில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொடர்ந்து பள்ளிவா சலில் பேஷ் இமாம்கள் பக்ரித் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பயான் (சொற்பொழிவு) நடைபெற்றது. பின்பு உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொட ரவும் சிறப்பு துவா (பிரார்த்தனை) நடை பெற்றது.
இதை தொடர்ந்து வீடுகளில் ஆடு, மாடுகள் குர்பானிக்காக அறுக்கப் பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர்.
ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம், சின்னக்கடை, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், கீழக்கரையில் தெற்குத்தெரு, நடுத்தெரு, பழைய குத்பா பள்ளி, வடக்குத்தெரு, மேலத்தெரு உள்பட 13க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதே போல் பனைக்குளம், என்ம னங்கொண்டான், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேசுவரம், பெருங்குளம், பெரிய பட்டினம், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிவா சல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொ ருவர் கட்டியணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தொண்டி
தொண்டியில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடு பட்டனர். மேலும் முஸ்லிம் கள் ஒருவருக்கொருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக் களை தெரிவித்து கொண்ட னர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.
விருதுநகர்-சிவகங்கை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி, வீரசோழன், காரேந்தல், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டி கையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தி லும் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழு கையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
- போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு ஆகியவற்றின் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையர் மணிமாறன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத் தார். இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் செயலர் ரமேஷ் மற்றும் தலைவர் சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் மாணவ-மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர்கள் சுலைமான் சதாம் முனிய சத்யா, கல்லூரியின் செஞ்சுருள் சங்க அலுவலர் பிரவிந்த் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
- துறைமுகம் அமைத்து தொண்டி நவீனப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்கள் உள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள பழஞ் சிறப்பும், வரலாற்று பெருமையும் வாய்ந்த ஊர் தொண்டி. சோழ நாட்டிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையான சேது மார்க்கத்தில் ராமேசுவரம் செல்லும் பண்டைய பெரு வழியில் இது அமைந்துள்ளது. கடலால் துண்டிக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தொண்டி என்று அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜராஜ சோழன் பெயரால் இது பவித்திர மாணிக்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
தொண்டியில் உள்ள பாண்டியர் கல்வெட்டுகளில் இது ''தொண்டியான பவித்திர மாணிக்கப் பட்டினம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கேரளாவில் அரபி கடற்கரையில் அமைந்த தொண்டி என்ற பட்டினம் சங்க இலக்கியங்களிலும் வெளி நாட்டார் குறிப்பு களிலும் குறிப்பிடப்படும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சேரமன்னருக்குரிய துறைமுக பட்டினமாகும்.
ஆனால் வங்க கடற் கரையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த தொண்டி சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி 400-ல் இருந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த துறைமுக நகராக விளங்கி யுள்ளது. இலங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் அகில், துகில், ஆரம், கற்பூரம் முதலிய பொருட்கள் தொண்டியில் வணிக சரக்குகளாக வந்து இறங்கிய தாகவும், அவற்றின் வாசம் கொண்டல் என்னும் கிழக்கு காற்றால் மதுரை வரை வந்து சேர்ந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.
கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் நின்றசீர் நெடுமாறனை (கூன்பாண்டியன்) புகழ்ந்து பாடிய பாண்டிக் கோவையில் இது பாண்டிய மன்னருக்குரிய தொண்டி என்ற பெயரில் "மீனவன் தொண்டி", "மாறன் தொண்டி" என்று குறிப்பிடப் படுகிறது. யாப்பருங்கலக் காரிகை என்ற நூலில் இது "வரகுணன் தொண்டி" என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் நந்திவர்மனை பற்றிய நந்திக்கலம்பகம் என்ற இலக்கியத்திலும் இது பாண்டியருக்கு உரியதாக குறிப்பிடப்படுகிறது. வணிக முக்கியத்துவமும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த இத்துறை முகபட்டினத்தைக் கைப்பற்றுவதற்கு கி.பி 12-ம் நூற்றாண்டில் பாண்டியர் சிங்கள மன்னர்கள், சோழர் ஆகியோருக்கிடையே போர்கள் நடைபெற்றதாக மகாவம்சமும் சோழரின் ஆர்ப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கின்றன.
இத்தனை சிறப்பு வாய்ந்த தொண்டியின் தொன்மையை அறியும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1980-ல் தொண்டியின் வடபுறமுள்ள தொண்டியம்மன் கோவில் மேட்டில் அகழாய்வு செய்தது. இப்பகுதியை பாண்டிய மன்னர்கள் இடைக்கால பாண்டிய நாட்டில் தொண்டி மிகச்சிறந்த துறைமுகமாக விளங்கியதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியது.
மேலும் இந்த ஆய்வில் தொண்டி சீன நாட்டோடு தொடர்பு கொண்டிருந்ததை வெளிப்படுத்தும் சீனிட்டுச் செலான் வகை பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் முதலாம் ராஜராஜன், நாயக்கர் கால காசுகளும் கிடைத்தன. தொண்டியில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு பிற்காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிற்கால பாண்டியர் கல்வெட்டு இதனை நகரீசுவரர் கோவில் என்று குறிப்பிடுகிறது.
மேலும் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளையில் பாண்டிய மன்னன் பெயரில் அழைக் கப்பட்ட 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இதனை தெரிவிக்கும் வகையில் பாறைக்கல்வெட்டும் உள்ளது. இக்கோவிலை ரெத்தினம் பிள்ளை வகையறா வாசு குடும்பத்தினர் இன்றும் பராமரித்து வருகின்றனர். மேலும் இது போல கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்கள் பல உள்ளது.
தொண்டிக்கு வடக்கே பழம்பெருமை வாய்ந்த காவல் தெய்வமான தொண்டியம்மன் கோவில் உள்ளது. தொண்டியில் உள்ள குடிநீர் குளமான கைக்குளவர் குளம் தற்போது கக்கிளான் குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் வீரபாண்டியன்
(கி.பி.1198) கல்வெட்டு "காளி கணத்தான்குளம்" என்ற பெயரில் வணிக வீரர் தொடர்பால் இக்குளம் தோற்றுவிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. இக்குளத்தைச் சீர்திருத்தி இதற்குரிய மடையை மருது சேர்வைகாரர் செய்வித்துள்ளதை இங்குள்ள கி.பி.1795 -ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று தெரி விக்கிறது.நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செட்டி நாட்டு பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை தொண்டி துறைமுகம் வழியாகவே கொண்டு வந்துள்ளனர். தூத்துக்குடியில் துறைமுகம் வந்த பின் புகை வண்டி, ெரயில் பாதை என வளர்ச்சியடைந்த பின் தொண்டி துறைமுகம் தனது வரலாற்றை இழந்து தற்போது மீன்பிடி கிராமம் போல் ஆனது. மேலும் இங்கு கப்பல்படையும் இருந்தது.
இங்கு கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி இருந்தும் இல்லாதது போல் உள்ளது. ஆனால் கட்டண கடற்கரை பூங்கா உள்ளது. அரசு பொது மருத்துவமனை, அரசு நூலக கட்டிடம், அரசு போக்குவரத்து பணி மனை என எல்லாம் இப்பகுதி மக்களின் கனவாகவே உள்ளது. அரசும், தொல்லியல் துறையும், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் பழமை சிறப்பு வாய்ந்த தொண்டியை பழமை மாறாமல் துறைமுகமாக்கி, நவீனப்படுத்தப்படுமா? என்பதை இந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
- நீர் ஆதாரம் மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடை பெற்றது. தலைவர் திசை வீரன், கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அந்த மாவட்டத்தில் பணி புரியக்கூடிய அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பணிபுரிந்தால் அந்த மாவட்டமானது வளர்ச்சி பெறும். அவ்வாறு செயல்படுவதற்கு திட்டக்குழு அவசியமான ஒன்றாகும்.
நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீர் மட்டுமே பற்றாக்குறையாக இருந்து வருகிறது. அந்த பற்றாக்குறையை போக்கு வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றது.
தண்ணீர் சீராக கிடைத்திடும் பட்சத்தில் விவசாயம் மேம்படும், சட்டம் ஒழுங்கு சீராக அமை யும்,முதல்-அமைச்சரின் அறிவுறுத்த லின்படி குடிநீர் சீராக கிடைத்திடும் பொருட்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குடிநீரானது கரூரி லிருந்து கொண்டு வரப்படு கிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீரை எவ்வாறு வீணாகாமல் உபயோகிப்பது என திட்டக்குழு உறுப்பினர்கள் திட்டங்கள் வகுக்க வேண்டும். அவ்வாறு திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் குடிநீர் பற்றாக்குறை என்பது ஏற்படாது.
குடிநீர் வீணாக்காமல் நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் செல்லக்கூடிய கால்வாய்கள், குளங்கள் அனைத்தையும் தண்ணீரை சேமிப்பதற்கு உரிய நட வடிக்கைகளை திட்டக்குழு உறுப்பினர்கள் மேற் கொள்ள வேண்டும். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூ டிய திட்டக்குழு உறுப்பி னர்கள் திட்டங்களை வகுக்கின்ற போது தங்கள் பகுதிகளில் நீர் ஆதார மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
- மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
கீழக்கரை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாத புரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் இன்று காலை தாய்கார்டன் இடத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட செயலாளர் தினாஜ்கான் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும், முதிய வர்களும், குழந்தைகளும் திடலில் நடைபெற்ற இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நிருபர்களிடம் கூறுகையில், இறைத்தூதர் இப்ராஹிமின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பெருநாளின் பல வணக்கங்கள் அமைந்துள் ளன, தொழுகைக்கு பிறகு அவரவர் சக்திக்குட்பட்டு பலி பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தர உள்ளோம், இந்த பெருநாளில் அனைவரும் நல்வாழ்வு பெறவும் அழகிய வாழ்க்கையை வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தோம்,
மனிதருக்கு மனிதர் தியாக உணர்வை வளர்த்துக் கொள்வதையே இப் பெருநாள் வலியுறுத்துகிறது என்றார்.
இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர், இப்ராஹீம்சாபிர், செய லாளர் தினாஜ்கான் மற்றும் நிர்வாகிகள் கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






