என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ஓட்டுப்பதிவு எந்திரங்களின் தரம் குறித்து பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தேர்தல் தாசில்தார் ரவி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தி லுள்ள மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரக் கிடங்கை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதா வது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரக்கிடங்கில் பாதுகாப் பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நாளை முதல் ஒருமாத காலத்திற்கு பெங்க ளூர் பெல் நிறு வனம் மூலம் பொறியாளர்களால் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும் தரத்தன்மை குறித்து பரி சோதிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமு கர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுபதிவு எந்திரங்களில் பராமரிப்பு பணிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பதுடன் இந்த பணிகள் முடியும் வரை முழுமையாக பாதுகாப்பு பணியில் போலீ சார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் மாரி செல்வி, தேர்தல் தாசில்தார் ரவி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • டாக்டர்கள்-நர்சுகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றர்.
    • உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவ மனைகள், கிராமப் பகுதிக ளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணிபுரியவில்லை.

    பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு மருத்துவ மனைக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க வழி இல்லை. இது தவிர பெரும் பான்மையான மருத்துவ மனைகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவ மனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

    இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங் களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர் களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • எலி மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • குழந்தைகள் பல் துலக்கும் பேஸ்ட் என கருதி பயன்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மற்றும் தற்கொலை முயற்சிக்கு தூண்டுகோலாக அமையும் என்ற வணிக பெயரில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தினை வேளாண்மை மற்றும் இதர உப யோகங்களுக்கு பயன்படுத்த ஒன்றிய அரசு முற்றிலும் தடைவிதித்துள்ளது.

    பொதுவாக மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தானது வீட்டு உபயோகங்களுக்கு எலிகளை கட்டுப்படுத்து வதற்கு பயன்படுத்தப்படு கிறது. மேலும் இதனை குழந்தைகள் பல் துலக்கும் பேஸ்ட் என கருதி பயன்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இதற்கு எதிர்வினை மருந்து இல்லாத காரணத்தினால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதனை தயா ரிப்பது மற்றும் பயன்படுத்து வதை முழுவதுமாக தடை செய்துள்ளது.

    எனவே பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி மருந்தினை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும், பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேலும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர கடை விற்பனை யாளர்கள் மஞ்சள் பாஸ்ப ரஸ் எலி மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சி மருந்து தடைச்சட்டம் 1968-ன் கீழ், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • உத்தரகோசமங்கை கோவிலுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
    • பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

    குறிப்பாக விஷேச நாட்களிலும், ஆருத்திரா தரிசனத்தன்றும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இந்த கோவிலுக்கு சென்று வர தற்போது வரை போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பக்தர்கள் கூடுதல் விலை கொடுத்து ஆட்டோ, கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சத்திரக்குடி, சாயல்குடி, கீழக்கரை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து உத்தரகோசமங்கைக்கு பஸ் வசதி இல்லை. இப்பகுதியை சேர்ந்த வர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் ராமநாத புரத்திற்கு வந்து பஸ் ஏற வேண்டும். இதனால் பொது மக்கள் கடும் சிரமமடைகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும் அவதியடை கின்றனர். எனவே பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    • 38 மாவட்டங்களின் பெயர்களை 19 விநாடிகளில் கூறும் மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றது.
    • ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள முகமது காசீம் தெருவைச் சேர்ந்த அசாருதீன், அப்சான் நாச்சியா தம்பதியின் மகள் அதிபா. இவர் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் திறமையைக்கண்டறிந்து மேடை ஏற்றி கல்வியோடு இணைந்த தனித்திறனை வெளிப்படுத்த இப்பள்ளி தலைமை ஆசிரியை நல்லாசிரியர் விருது பெற்ற சாந்தி முருகானந்தம் உறுதுணையாக இருந்து வருகிறார். மேலும் பள்ளியை தூய்மையாக வைத்ததற்கான மாநில அரசின் புரஸ்கார் விருதும் பெற்றுள்ளார்.

    அந்த வகையில் பள்ளியில் துறுதுறுவென சுறுசுறுப்பாக இயங்கும் அதிபா என்ற மாணவியை பெற்றோர் ஒத்துழைப்புடன் தனித்திறமையை வெளிப்படுத்த தயார் செய்துள்ளார். அதன்படி 2-ம் வகுப்பு மாணவி அதிபா, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்க ளை 19 நொடிப்பொழுதில் சொல்வதோடு, இந்திய மாநிலங்கள் 28 -ன் பெயரையும் 16 நொடிப்பொ ழுதிலும், தமிழ் எழுத்துக்கள் 247யும் 53 நொடிகளிலும் கடகடவென மனப்பாடமாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவரது செயலை பள்ளியின் தலைமை ஆசிரியையையும் பாராட்டு வதோடு, சக பள்ளி ஆசிரியைகளும், மாணவ மாணவிகளும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

    • பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    • மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஒச்சத் தேவன்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி முனீஸ்வரி (வயது49). இவர்களது மகன் கோட்டைச்சாமி (26) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (28) என்பவருக்கும் முன்பகை இருந்தது.

    இந்த நிலையில் சண்முக நாதன் தனது நண்பர்கள் சிவபாரதி (20), முத்து ராமலிங்கம் (28) ஆகியோ ருடன் பொன்னையா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் முனீஸ்வரி தனியாக இருந்தார். அவரை 3 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் வீட்டின் ஓடுகளை கம்பால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கிருந்த டிராக்டரில் ஏறி தப்பி சென்றனர். டிராக்டரை அருகே உள்ள கருவேல மர காட்டுப்பகுதியில், நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவிலாங் குளம் போலீஸ் நிலையத் தில் முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    • கட்டிட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் கடும் பாதிக்கப்பட்டது.
    • விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் கட்டப்பட்டு வந்த கட்டிடங்கள் முடிவு பெறாத நிலையில் உள்ளன.

    இந்நிலையில் தற்போது பிளம்பிங் தொழிலுக்கு தேவையான குழாய்கள், பைப்புகள், மின்சாதன பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளன. கடந்த 2 மாதத்தில் 35 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளன. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பல இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் பணிகளை நிறைவு செய்ய முடியாமல் பரிதவிப்பில் உள்ளனர்.

    கடந்த 2 மாதமாக விலையேற்றம் தொடர்ந்து வருவதால் புதிய வீடு கட்ட திட்டமிட்டவர்களும் பணியினை தொடங்குவதற்கு தயங்கி வருகின்றனர். குறிப்பாக மின்சாதன பொருட்களான வயர் காயல், வயரிங் பைப்புகள் விலை அதிகரித்துள்ளது.

    கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் பொறியாளர்கள், பிளம்பர்கள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால் வீடு கட்டுவது பலருக்கு கனவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரிஷியன் ஆகியோர் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். கட்டிட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கமுதி கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தீஸ்வரருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், திருநீறு, பால், தேன், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் 500-க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கமுதி மண்டலமாணிக்கத்தில்

    உள்ள அரும்பவளநாயகி சமேத கைலாசநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நாட்டுக்கோழி வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய அரசு உயிர்த் தொழில் நுட்பவியல் துறைத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேலூரிலுள்ள வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சார்பில் கால்நடை, கோழி, நாட்டுக்கோழி வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வு முகாம் பனைக்குளத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மேனாள் விரிவாக்கக் கல்வி இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சுதீப் குமார். வேலூரிலுள்ள வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் வேளாண் பேராசிரியர் சத்தியவேலு, திட்ட துணை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயலிங்கம் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணையாளர்களின் தற்போதைய நிலைப்பாடும் மேம்பாட்டுக்காகக் கடைப்பிடித்திட வேண்டிய வழிமுறைகளும் என்ற தலைப்பில் தொழில் நுட்பவுரையாற்றினார். இத்திட்டத்தின் களப்பணியாளர் நவீன் நன்றி கூறினார். ராமநாதபுர மாவட்டம் பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனைக்குளம் வட்டார கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் செய்குல் அக்பர் செய்திருந்தார்.

    • 10 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில், இணை மானிய திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.20.15 லட்சம் மதிப்பிலான கடனு தவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த திட்டம் ராமநாத புரம் மாவட்டத்தில் ப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் 143 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொழிற்கடன்களுக்கு 30 சதவீதமும், அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம். தனிநபர், குழு தொழில்க ளுக்கு கடன் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் தொழில் கடன் பெறுபவர் பங்களிப்பு தொகை பொது பிரிவினர் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர்களுக்கு 5சதவீதம் செலுத்த வேண்டும். கடன் பெறுவோர் 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnrtp.org/citizenlog.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்ய லாம். விண்ணப்பத்தை அந்தந்த ஊராட்சி தொழில் சார் வல்லுநர்களிடம் பெறலாம்.

    இந்த திட்டம் குறித்த தகவல்களுக்கு மகளிர் வாழ்வாதார சேவை மையம் (மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரங்களுக்கு 72004 36477 என்ற தொடர்பு எண்ணிலும், திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களுக்கு 90477 08040 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வாழ்ந்து காட்டு வோம் திட்ட அலுவலகத்தை 9486745280, 8300098120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட செயல் அலுவலர் குமரன் , செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, தொழில் நிதி வல்லுநர் சத்திய சொரூபன் , உதவி பொறியாளர் பிரதீப், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 108 ஆம்புலன்சு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி கிராமத்தில் பேரூராட்சிக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் நில அளவை செய்து வேலி அமைப்பது கடற்கரை எதிரே நல்ல தண்ணீர் ஊற்று உள்ள முடிச்சலான் தோப்பில் உள்ள கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அங்கு அமைந்துள்ள 4 கிணற்றைச் சுற்றிலும் கம்பி வேலி சுற்றி இரும்பு கதவு அமைக்க வேண்டும்.

    பேரூராட்சிக்கு சொந்தமான 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள பம்ப் ரூமிற்கு மின் இணைப்பு மற்றும் மராமத்து பணி செய்ய வேண்டும்.

    தொண்டியில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதாலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர கால மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவனை கொண்டு செல்வதற்கும், இங்கு முறையான அவசர ஊர்தி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய அவசர ஊர்தியான 108 வாகனம் அரசு வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் புகை போக்கி எந்திரம் வாங்குதல், உயர் மின் அழுத்தம் காரணமாக பழுதடைந்த மின் விளக்குகளுக்குப் பதிலாக புதிதாக 164 மின் விளக்குகள் பொருத்துவது போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அடிப்படை வசதி இல்லாததால் ரேசன் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர்.
    • ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள காணிக் கூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்றும் வாங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ரேசன் பொருட்களை கொடுக்கா மல் கைரேகையை மட்டும் வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் போட வேண்டிய ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் பொதுமக்கள் தங்கள் ரேசன் அட்டைகளை சாலை யில் வீசி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஒச்சத்தேவன் கோட்டை கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்கு நிறுத்தப்பட்ட ரேசன் பொருட்களை மீண்டும் விநியோகம் செய்ய வேண்டும். எங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கா மல் காலம் தாழ்த்திய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்காத பட்சத்தில் ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    ×