என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • தனி மனித ஒழுக்கம், கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி கூட்ட ரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் மூலம் இணைந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மாணவ நல அமைப்பு சங்கத்திற்கான இலச்சினை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் அறிவுத்திறனை மேம்பாடுத்துவதற்காக மாணவ நல அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 293 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ- மாணவிகளை முறையே அந்தந்த வகுப்பில் உள்ள மாணவ- மாணவிகளை 4வகையாக பிரித்து அவர்கள் எளிதில் அறியும் வண்ணம் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா குழு பிரித்து அவர்களின் செயல்பாடு கள் குறித்து கண்காணிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் மாணவ-மாணவிகளை குழு தலைவராக நியமித்து அவர்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள் வார்கள். இக்குழுவில் உள்ள மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

    ஒரு மாணவனின் அன்றாட செயல்பாடு என்பது இக்குழு தொடங்கியதற்கு பின் நல்ல மாற்றத்தை கண்டு அவர்களுடைய வளர்ச்சி ஏற்ற தக்கதாக அமையும். அதுபோல் ஒவ்வொரு நாளும் வகுப்பில் அவர்களுடைய தனிமனித ஒழுக்கம் மற்றும் வகுப்பில் பாட முறைகளை கவனித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன் நாள்தோறும் புத்தகங்கள் வாசிப்பு திறனை மேம் படுத்துதல், விளையாட்டில் ஆர்வமுள்ள விளை யாட்டுகளை தேர்வு செய்து அதில் பங்கேற்று திறமையே மேம்படுத்துதல். இலக்கிய போட்டிகளில் பங்கேற்றல் என கல்வியுடன் சேர்த்து அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று திறனை மேம்படுத்துதலே இந்த அமைப்பின் சிறப்பு தன்மையாகும்.

    மேலும் கல்வியில் பின் தங்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் டேவிட், முகவை சங்கமம் செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இந்த துணை மின் நிலையம் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான சக்கரக் கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள்.

    தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன் கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள்.

    சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக் கல் வீதி, கே.கே.நகர், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகளில், பெரியகருப்பன் நகர், கோட்டைமேடு, எட்டிவயல்.பட்டினம்காத்தான், ஆதம்நகர் போக்குவரத்து நகர், கழுகூரணி, சாத்தான் குளம் ஆகிய பகுதிகளிலும் ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்கு வாணிவீதி படைவெட்டி வலசை பூசாரிவலசை ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி வெள்ளரி ஓடை சேதுநகர் காரான் முத்துப்பேட்டை பெரியபட்டணம்.

    தினைக்குளம், வள்ளிமாடன் வலசை, வண்ணான் குண்டு, பத்ராத ரவை, நயினா மரைக்கான், சேதுநகர், பிச்சா வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளிலும் நாளை (6-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். அப்போது் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி விசித்ராவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஏற்கனவே ரூ.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

    நேற்று கூடுதல் நிவாரணமாக இலவச வீட்டுமனை பட்டாவினை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நகர் வீட்டு உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.

    இதில், 50 குடும்பங்கள் வசிக்கும் பகுதி அருகே 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் மாணவர்கள், பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இக்கடையை பூட்ட பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சம்பந்தமே இல்லாமல் வேறு பகுதியில் கடையை பூட்டியுள்ளனர்.

    எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடை எண் 6969 பூட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தினர். உத்தரகோச மங்கை அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் வெள்ளா மருச்சுகட்டி கிராம மாணவர்கள் பெற்றோருடன் மனு அளித்தனர். பள்ளி நேரத்தில் பஸ் வசதியின்றி 4கி.மீ., நடந்து சிரமப்படுகிறோம். காலை 8 மணி, மாலை 5 மணிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். மேலும் குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி கூட்டாம்புளி, சாத்தமங்கலம் கிராம மக்கள் காவிரி குடிநீர் வரவில்லை. சுகாதாரமற்ற குளத்து நீரை பயன்படுத்துகிறோம். சுகாதாரமான குடிநீர் குடம் ரூ.15க்கு விற்கின்றனர். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும், என வலியுறுத்தினர்.

    இக்கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக 267 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மாரிசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • விரும்பிய இடத்திலோ யே பணியிடமாறுதல்வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தனர்.

    இந்த மனுவில் கடந்த 33 ஆண்டு காலமாக எங்களை பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்டோம். 3-வது முறையாக 2015 அன்று முதல் அமைச்சர் கலைஞர் சட்டமன்றத்தில் அறிவித்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களாக பணி செய்தோம். ஆனால் இதுநாள்வரை எவ்வித பணி நியமன ஆணையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

    மேலும் 2009-ம் ஆண்டு முதல் எங்களுக்கு வழங்க வேண்டிய காலை முறை ஊதியத்தை கணக் கிட்டு வழங்க வேண்டும். முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல இறந்த பணியாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோன்று இறந்த பணியாளர்களின் வரிசுகளுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள காலி பணியிடங்களில் மக்கள் நலப்பணியாளர்களை விரும்பிய இடத்திலோயே பணியிடமாறுதல்வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
    • ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி நேற்று முதல் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ.வரை காற்று வீசி வருகிறது.

    தனுஷ்கோடி, பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1500 விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    2-வது நாளாக இன்றும் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நேற்று முதல் இந்த பகுதியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. மேலும் சூறாவளியால் புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அக்காள்மடம், முகுந்த ராயர் சத்திரம், அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மணல்கள் மூடியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டது.

    பாம்பனில் கடல் சீற்றமாக இருந்தது. அங்குள்ள தூக்கு ரெயில் பாலம் அருகே திடீரென கடல் பல அடி தூரம் உள்வாங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைபர், நாட்டுபடகுகள் கடற்கரை மணலில் தரைதட்டி நின்றன.

    • கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் அருகே கழனிக்குடி என்ற பகுதியில் பயணிகளுடன் சுற்றுலா வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங் களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்திடவும், பயிர் சாகுபடி முறையில் அதிக பட்ச உற்பத்திக்கான நுட்பங் களை பயன்படுத்தவும், பண்ணைக்கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால், கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலமாக ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 300 எக்டர், நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் குறைந்தது ஒரு எக்டர் நில உரிமை உடைய வராக இருக்க வேண்டும்.

    மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண் புழு உரத்தொட்டி மற்றும் கால் நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக் கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்ற வற்றை திட்ட வழிகாட்டு தலின்படி அமைக்க வேண் டும். இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பிதல் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு பினனேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்கு நர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் இத்திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும்

    சிறுகுறு சான்று வைத்துள்ள ஆதிதிராவிட மற்றும் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியம் எக்டருக்கு ரூ.12 ஆயிரத்து டன் சேர்த்து மொத்தம் எக்டருக்கு ரூ.42 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூண்டுகளில் அடைத்து வைத்து பச்சைக்கிளி வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ராமநாதபுரம் வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங்காடை போன்ற வன உயிரினங்கள் வளர்ப்பது குற்றமாகும். அவ்வாறு பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கக் கூடிய வன உயிரினங்களை ஜூன் 30-ந்தேதிக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கடந்த மே 26-ந் தேதி அறிவித்தார்.

    அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகம் மற்றும் வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.ஒப்ப டைக்கப்பட்ட பச்சைக் கிளிகள் பராமரிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் முன்னிலை யில் வனத்தில் விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று 2 பச்சைக்கிளிகள் மாவட்ட வன அலுவலக வனத்தில் மாவட்ட வன அலுவலரால் விடுவிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் வன உயிரினங்களை தாமாக முன்வந்து வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

    தவறும் பட்சத்தில் வனக் கோட்ட களப்பணி யாளர்களால் ரோந்து பணியின் போது கண்டு பிடிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தெரிவித்தார்.

    • வேன்கள் நேருக்கு நேர் மோதல்; பழ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
    • அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ஆனந்தராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒச்சதேவன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர பாண்டி (வயது28). பழவியாபாரியான இவர் நேற்று இரவு மதுரையில் இருந்து பழங்களை வாங்கி கொண்டு சரக்கு வேனில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர் குமரசக்தி என்பவரும் உடன் வந்தார்.

    அபிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு சரக்கு வேன் பழங்கள் ஏற்றி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வேன்களின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனின் முன்புறம் அமர்ந்துள்ள செந்தூர பாண்டி, குமரசக்தி ஆகியோர் படுகாய மடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செந்தூர பாண்டி கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். குமரசக்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ஆனந்தராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விலை உயர்வால் தக்காளி வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர்.
    • பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில், வாங்க பொதுமக்கள் தக்காளி வாங்க தயாராக இல்லை. இதனால் மாலை நேரத்தில் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120-க்கு விற்பனை செய்யப் பட்டது. நேற்று காலை ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்றது. இதன் காரணமாக மக்கள் தக்காளியை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

    இதனால் தக்காளிகள் விற்பனை ஆகாமல் அதிக அளவில் குவித்து வைத்தி ருந்தனர். பழங்கள் அழுகும் நிலைக்கு சென்றதும் மாலையில் ரூ.100-க்கு விற்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.

    தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.

    • பிரம்ம தீர்த்த குளத்தில் தண்ணீர் வெளியேற்றத்தை தீவிரமாக நடந்து வருகிறது.
    • மீன்கள் செத்து மிதந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்தர கோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால்தொடர்ந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பாக ராமநாதபுரம் செல்லும் சாலையில் 3 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம தீர்த்த தெப்பக்குளம் அமைந்துள்ளது.

    பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் 2000-ம் ஆண்டு வரை பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வந்தனர். வீடுகளில் உள்ள கழிவுநீர் பிரம்ம தீர்த்த குளத்தில் கலந்ததால் நீராடுவதற்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. இதனால் பக்தர்கள் தலையில் மட்டும் தண்ணீர் தெளித்து சாமி தரிசனம் செய்து வந்தனர். கடந்த ஜூன் 19-ந்தேதி பிரம்ம தீர்த்த தெப்பக்கு ளத்தில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதைக் கண்டு ஏராளமான பக்தர்கள் பிரம்ம தீர்த்தத்தில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்யு மாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் சார்பில் பிரம்மதீர்த்த தெப்பக் குளத்தை தூய்மை செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. அதன்பின் மழை நீர் சேகரிப்பு முறையில் தூய்மையான நீர் குளத்தில் சேகரிக்க திட்ட மிட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில், திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில், கோவிலின் சரக பொறுப்பாளர் சரண்யா மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • கீழக்கரையில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு உள்ளது.
    • ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    8-வதுவார்டு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும்பணி மும்முரமாக நடைபெற்றது. அந்த பணி தொடங்கப்பட்டு 8 மாதத்திற்கும் மேலாகி விட்டது. இதுவரையிலும் அந்த பகுதியில் பொதுமக்க ளுக்கு தண்ணீர் வினியோகம் செய் யப்படவில்லை.

    மேலும் ஆழ்துளை கிணற்றை சரிவர மூடாமல் அப்ப டியே விட்டு சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.

    இதனால் அவர்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளதால் ஆபத்தான ஆழ்துளை கிணற்றை மூடிட உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் முகமது காசிம் கூறுகையில், ஆழ்துளை கிணறு அமைத்த பின்பு அப்படியே பணியை நிறுத்தியதால் அங்குள்ள சிறுவர்கள் ஆழ்துளை கிணறுக்குள் பெரிய கற்களை போட்டதாக கூறப்படுகிறது.

    அதனால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு உடனடியாக பணியை முடிக்க வேண்டும் என்றார். ஆழ்துளை கிணற்றை மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    கீழக்கரை நகராட்சி சேர்மன் அலுவலகத்திற்கு வந்து சேர்மன், கவுன்சி லர்கள் நாள்தோறும் வார்டு களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×