என் மலர்
நீங்கள் தேடியது "Expansion"
- சாலை விரிவாக்க பணி முடிந்தும் அந்த இடத்தில் விளக்கு பொருத்தப்படாமல் இருக்கிறது.
- சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 11 வது வார்டு கவுன்சிலர், மகாலட்சுமி சதீஷ்குமார் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, பேராவூரணி மெயின்ரோடு, ஆவணம் ரோடு இணைப்பில் தந்தை பெரியார் சிலை எதிரே ஆவணம் சாலையில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக எரிந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் சாலை விரிவாக்கம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி காரணமாக உயர் மின் கோபுர விளக்கு அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்க பணி முடிந்து 8 மாத காலங்கள் ஆகியும் அந்த விளக்கு அவ்விடத்தில் பொருத்தப்படாமல் இருக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவ - மாணவியர்கள், பெண்கள் என அனைவரும் அந்த இடத்தை கடக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.
ஆகவே பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த உயர் மின் கோபுர விளக்கை அதே இடத்தில் போர்க்கால அடிப்படையில் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனவும், சென்டர் மீடியன் இடையே தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.
- சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
- காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
இதனால் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தோப்புகுளம், ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி , பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடை வரை மெயின் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
- இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆய்வின்போது கோட்டப் பொறியாளர் சசிகுமார் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சாலைப்பணியின் ஒப்பந்த–தாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது.
சங்ககிரி:
மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல், மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது. மேலும், ஆலத்தூர்ரெட்டி பாளை யத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் ரூ.71 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, சேலம் கண்கா ணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை உடனே அகற்றி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இடைப்பாடி நெடுஞ்சா
லைத்துறை கோட்டப்பொ றியாளர் சண்முகசுந்தரம், சங்ககிரி உதவி கோட்டப்பொறியாளர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து அதில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளது. இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் திருவேங்கடம் சாலையில் நகராட்சி கிழக்குப் பகுதியில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையம் தற்காலிக பஸ் நிலையமாக இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்காலிகபஸ் நிலையத்தில் கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் பஸ் நிலைய விரிவாக்க பணி முடியும் வரை தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இளையான்குடி நகருக்குள் இருக்கும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.
- புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் மனுக் கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
இளையான்குடியில் ஊருக்கு வெளியே யாருக்கும் பயன் தராத வகையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இளையாங்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும், மக்கள் நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
மேலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டா லினிடம் இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபுல்லாஹ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என மக்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதை கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது எப்போது? என்பது குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காங்கிரஸ் சார்பில் 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஒரு இடங்களும் இருக்கிறது. மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், கர்நாடக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நான் கூட, காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேசி வருகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்களால் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி. ஒரே நேரத்தில் மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களும் நிரப்பப்படும்.
கடந்த மாதம் (செப்டம்பர்) மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா வெளிநாட்டு பயணத்தால் அப்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடியாமல் போனது. மாநகராட்சி மேயர் தேர்தல் முடிந்திருப்பதுடன், மேல்-சபைக்கு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 30 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஆஸ்பத்திரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை இ.எஸ்.ஐ. நிர்வாகம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் பார்வையிட்ட அவர்கள் பின்னர் ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவைப்படும் நிலத்தையும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றார்.
கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைந்துள்ளன. மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகா தொடர்பாக இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22, மஜதவுக்கு 12 என (முதல்வர், துணை முதல்வர் உள்பட) பிரித்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இலாகா பகிர்வில் இரு கட்சியினரிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆனது.

இந்திய தொழில் கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டல நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத் தலைவர் ஆர்.தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்நாடு அரசு சார்பில் எளிதான தொழில் செயல்பாடுகளுக்கான ஒரு இணையதளத்தை தயார் செய்ததற்காகவும், அது நல்லமுறையில் இருப்பதற்காகவும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தெற்கு மண்டலத்தின் நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவித்தோம். மேலும் இந்த இணையதளம் குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தோம்.
இந்த இணையதளத்தை 29 நிறுவனங்கள் ஏற்கனவே உபயோகிக்கின்றனர். அதில், அனைவருக்கும் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. எனவே, அதை தொடரலாம். சி.ஐ.ஐ.யின் மாடல் கேரியட் சென்டர் மூலம் 4 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் இதுபோல ஒரு இணையதளம் தயார் செய்துள்ளனர். அதுவும் நல்லமுறையில் உள்ளது. மேலும், அதனுடைய செயலாக்கத்தை இன்னும் சிறப்பாக உயர்த்தப் போவதாக கூறினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ஆர்.தினேஷ் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- எளிதாக தொழிலாற்றுவதற்காக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் ஒரு இணையதளம் தயார் செய்துள்ளதாக கூறினீர்களே, அதன் மூலம் சிறு தொழில்கள் வளர்ச்சியடைய வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- ரூ.10 கோடி முதலீட்டிற்கு குறைவாக உள்ள சிறு தொழில் முனைவோர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்தால் கட்டணம் கிடையாது. இந்த தகவல் மக்களை சென்றடைய வேண்டும். இதில், விண்ணப்பிக்கும்போது, பல துறைகளுக்கு ஒப்புதலுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு இடத்தில் விண்ணப்பத்தைக் கொடுத்தால் அனைத்துத்துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு வந்துவிடும்.
முதல்-அமைச்சர் தொடங்கியதை, சிறு தொழில் முனைவோர்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். எளிதாக தொழிலாற்றுவது குறித்து நாங்கள் சென்றமுறை வழங்கிய ஆலோசனைகளையும் சேர்த்துள்ளனர். இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கேள்வி:- தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு இருக்கிறதா? அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கின்றதா?
பதில்:- இப்போது, தொழில் வழிச் சாலைகள், சாலைகள், விமான போக்குவரத்து போன்றவற்றில் அரசால் செய்யப்பட்டுள்ள அர்ப்பணிப்பு தொடர்ந்தால் நிச்சயம் திருப்தி கிடைக்கும். விமான நிலையங்களுக்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கிறது. 5 விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்காக இணைப்பு என்று பார்த்தால், துறைமுகங்கள், சாலைகள், ரெயில், விமானம் ஆகியவை உள்ளன. இப்போது சென்னை மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலத்தில்கூட, இரவிலும் விமானங்களை இயக்கும் வசதிக்கு நாங்கள் பரிந்துரை செய்திருக்கின்றோம். அனைத்து வகையிலும் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய தொழில் கூட்டமைப்பில் ஆலோசித்து, வழிவகுத்து கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews