விரிவாக்க பணிக்காக பஸ் நிலையம் மூடல்-சங்கரன்கோவிலில் தற்காலிக பஸ் நிலையம் திறப்பு

சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.
விரிவாக்கத்திற்காக பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளதையும்,  தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.
விரிவாக்கத்திற்காக பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளதையும், தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் புதியபஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து அதில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளது. இதனால் இன்று முதல் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்த பஸ் நிலையம் மூடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் திருவேங்கடம் சாலையில் நகராட்சி கிழக்குப் பகுதியில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையம் தற்காலிக பஸ் நிலையமாக இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்காலிகபஸ் நிலையத்தில் கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் பஸ் நிலைய விரிவாக்க பணி முடியும் வரை தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com