search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patient suffering"

    • மின் இணைப்பு தராததால் காட்சி பொருளான எக்ஸ்ரே கருவியால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
    • இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது.

    இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் செயலாளர் செய்யது இப்ரா ஹிம் கூறுகையில்:-

    ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே மிஷினுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய மெஷினில் இணைக்கப்பட்டபோது மின் கசிவு ஏற்பட்டு அனைத்துவயர்களும் எரிந்து விட்டதாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜென ரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத் திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக் கப்படுகிறது.

    இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×