அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை

ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மகப்பேறு டாக்டர்கள் இல்லை.
அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளும், கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணி புரியவில்லை.

இதனால் பல இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு ஆஸ்பத்தி ரிக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. இது தவிர பல ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க போதிய அளவில் மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க வும், ேபாதிய அளவில் மகப்பேறு டாக்டர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com