பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை

பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.தலைமறைவான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் கடந்த 3 நாட்களாக தனது கண வருடன் தங்கியிருந்த பெயர் விலாசம் தெரியாத சுமார் 40 வயது மதிக்க தக்க பெண் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கபட்ட நிலையில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தர்காவில் உள்ள கழிப்ப றையில் பிளேடால் கழுத்து மற்றும் இடது கை மணிக்கட்டில் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிப்பட்டு, மேல் சிகிச்சைக் காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஏர்வாடி தர்கா இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் இறந்த பெண் இருந்த இடத்தின் அருகில் தங்கியி ருந்தார். கோவை காந்தி புரத்தை சேர்ந்த ஜூலி (40) என்பவரிடம் விசாரித்ததில், கடந்த 25-ந் தேதி மாலை 3 மணிக்கு இறந்த நபர் பெரிய தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அங்கிருந்த வர்கள் தடுத்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலை யில் தலைமறைவான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com