search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganikkar"

    • முதன்முறையாக காணிக்கர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்முறையாக காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் பழங்குடியினர் பிரிவில் காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து பரமக்குடி சார் ஆட்சியில் அலுவலகத்தில் 17 நபர்களுக்கு காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ, முருகேசன் காணிக்கர் சாதி சான்றிதழை வழங்கினார். இதில் பரமக்குடி உதவி ஆட்சியாளர் அப்தாப் ரசூல், பரமக்குடி தாசில்தார் ரவி, கமுதி தாசில்தார் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×